தமிழ்நாடு மாநிலம், கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் நடுநாட்டு ஸ்தலம் அப்பர் சம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம். சுவாமி ஸ்ரீ பாடலீஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளர்.சிவகர தீர்த்தம், ப்ரம்ம தீர்த்தம் தென்பெண்ணை தீர்த்தம் கடல் நதி தீர்த்தங்களைக் கொண்டுள்ளது. முன்னர் காலத்து பாதிரிவனமாக இருந்த தலம். கிழக்கு நோக்கி ராஜகோபுரம் 5 (ஐந்து) நிலைகளையும், 7 (ஏழு) கலசங்களையும் கொண்டு அமைந்துள்ளது. பெரியநாயகி அம்மன் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுவாமி சன்னதி வலப்பக்கம் கணபதி, பரிவார சன்னதிகள் சூரியன், சந்திரன், அப்பர், பள்ளியறை, 63 நாயன்மார்கள், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர் உற்சவ மூர்த்திகள், முருகர் சன்னதி , கெஜலட்சுமி , ...