அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாசலம் - 606001, கடலூர் .
Arulmigu Virudhagireswarar Temple, Vriddhachalam - 606001, Cuddalore District [TM020368]
×
Temple History
தல வரலாறு
தல வரலாறு
விருத்தாசலம் என்னும் திருமுதுகுன்றம் நடுநாட்டு சிவ திருத்தலங்கள் 22-ல் ஒன்பதாவது திருத்தலமாகும். விருத்தாசலம் புராணத்தில் இந்த தளத்தில் சிவபெருமான் உலக படைப்பின் போது மலை உருவில் தோன்றினார் என்றும் அதனால் இந்த தலத்திற்கு பழமலைநாதர் எக்று பெயர் பெயர் பெற்றதாக ஞானக்கூத்தர் குறிப்பிடுகிறார்.
இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி அருள்மிகு பழமலைநாதரை வழிபட்டால் கங்கையில் நீராடி அருள்மிகு காசி விஸ்வநாதரை வழிபட்ட பலனை அடைவார்கள் அதனால் தான் இந்த தலத்திற்கு விருத்தகாசி என்ற பெயர் பெற்றது என்பர். காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி என்ற பொன்மொழி இதனால் ஏற்பட்டது.
மூர்த்தி, தீர்த்தம், தலம் இம்முன்றாலும் சிறப்புடன் அமைந்த திருத்தலம் இது இங்கு வாழ்ந்த உயிர்களுக்கு உயிர் துறக்கும் நேரத்தில்...தல வரலாறு
விருத்தாசலம் என்னும் திருமுதுகுன்றம் நடுநாட்டு சிவ திருத்தலங்கள் 22-ல் ஒன்பதாவது திருத்தலமாகும். விருத்தாசலம் புராணத்தில் இந்த தளத்தில் சிவபெருமான் உலக படைப்பின் போது மலை உருவில் தோன்றினார் என்றும் அதனால் இந்த தலத்திற்கு பழமலைநாதர் எக்று பெயர் பெயர் பெற்றதாக ஞானக்கூத்தர் குறிப்பிடுகிறார்.
இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி அருள்மிகு பழமலைநாதரை வழிபட்டால் கங்கையில் நீராடி அருள்மிகு காசி விஸ்வநாதரை வழிபட்ட பலனை அடைவார்கள் அதனால் தான் இந்த தலத்திற்கு விருத்தகாசி என்ற பெயர் பெற்றது என்பர். காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி என்ற பொன்மொழி இதனால் ஏற்பட்டது.
மூர்த்தி, தீர்த்தம், தலம் இம்முன்றாலும் சிறப்புடன் அமைந்த திருத்தலம் இது இங்கு வாழ்ந்த உயிர்களுக்கு உயிர் துறக்கும் நேரத்தில் அருள்மிகு விருத்தாம்பிகை அந்த உயிரை தன் மடியில் கிடத்தி முந்தானையால் இளைப்பாற்ற, அருள்மிகு பழமலைநாதர் அவ்வுயிர்களின் வலது காதில் ஐந்தெழுத்து மந்திரத்தை (சிவாய நம) உபதேசம் செய்து முக்தி அடைய செய்து அருள் பாலிக்கிறார்.
இத்தலம் மகா பிரளயம் வந்தபோது அழியாத தலம் திருமால், இந்திரன், பிரம்மன் போன்றவர்கள் வந்து வழிபட்ட தலம். சித்தர்கள் வாழ்ந்த இடம் பாம்பாட்டி சித்தர் ஜிவசமாதி அடைந்த இடம் எனக் கூறுவார்.
பஞ்சாட்சர மந்திரப்படி இத்திருக்கோயிலில் எல்லாம் ஐந்து ஐந்தாக இருப்பது சிறப்புடையதாகும் ( பிரகாரம், கோபுரம், கொடிமரம், நந்தி, மூர்த்திகள், தீர்த்தம், தேர், படிக்கட்டுகள் போன்ற வகையில் ஆகும்)
இந்த தலத்தில் பிறந்தால், வாழ்ந்தால், வழிபட்டால், இறந்தால், இத்தலத்தை நினைத்தால், ஆகிய ஐந்தும் சேர்ந்து நிலைத்து நின்று முக்தி கொடுக்கும் என்பர். இங்குள்ள மணிமுத்தா நதியில் உள்ள புண்ணியமடுவில் இறந்தோரின் எலும்புகளை இட்டால் கூழாங்கற்களாக மாறிவிடும். நீராடினால் பிணி அகற்று சித்தி பெற்று முக்தி பெறுவார்.
இத்தலத்தின் தலமரம் வன்னி மரமாகும். இது மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது இத்திருக்கோயிலில் ஆதியில் திருப்பணி செய்ய முன்வந்த விபசித்து முனிவர் வேலை செய்தவர்களுக்கு இம்மரத்தின் இலைகளைப் பறித்து வழங்குவார். அது அவர் உழைப்புக்கு ஏற்றவாறு பொற்காசுகளாக மாறியது என்பர்.
சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு இந்த 28 ஆகமங்களையும் 28 லிங்கமாக முருகப்பெருமானே நிலை நிறுத்தியத் திருக்கோயில் உள்ளது. இது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பாகும்.
இங்குள்ள ஆழத்து பிள்ளையார் திருக்கோயில் வினாயக பெருமானுக்கு உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இத்தலத்தில் உள்ள மாற்றுரைத்த வினாயகர் சமயக்குறவர்களின் ஒருவரான சுந்தரமூர்த்திகள் அருள்மிகு பழமலைநாதரை பாடிப்பெற்ற பன்னீராயிரம் பொற்காசுகளை மணிமுத்தா நதியில் இட்டு திருவாரூர் கமலாலய குளத்தில் எடுக்க சாட்சியாக இருந்தவர்.
அருள்மிகு பழமலைநாதரை வழிபட்டு இல்லற வாழ்க்கை நடத்திய நாதசர்மா அனவர்த்தினி ஆகிய இருவரும் சிவகணங்களாக மாறினர். அவர்கள் இருவருக்கும் இங்கு தனி சன்னதி அமைந்திருப்பது சிறப்பாகும்.
63-வர் பிரகாரத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் கால பைரவர் காசியில் இருப்பது போன்ற வடிவமைப்பைக் கொண்டது. குரு நமச்சிவாயரின் வேண்டுகோளுக்கு இணங்க அருள்மிகு பெரியநாயகி கொண்ட வடிவமே அருள்மிகு பாலாம்பிகை வடிவம் இச்சன்னதி பள்ளியறை அருகில் உள்ளது.
சமயக் குரவர்கள் மூவராலும் பாடப்பட்டது. மாணிக்கவாசகரால் வழிபாடு செய்யப்பட்டது. வண்ணச்சரபதண்டபாணி, வள்ளலார், கற்பனை கலஞ்சியம் சிவபிரகாச சுவாமிகள் போன்ற அருளாளர்களாலும் பாடப்பட்ட தலம்.
அருள்மிகு பழமலைநாதருக்கு மாசி மகம் திருவிழாவும், அருள்மிகு பெரியநாயகிக்கு ஆடிப்பூரத் திருவிழாவும், நடத்தப்பட்டு வருகிறது. இப்படி எண்ணரிய சிறப்புகளை கொண்டு அருள்பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு பழமலைநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும்.