(விருத்தாசலம், விருத்தம் - பழமை அசலம் - மலை) பழமை மலை என்பது திருமுதுகுன்றம் என ஆகி இப்பொழுது விருத்தாசலம் என அழைக்கப்பட்டு வருகிறது. உலகம் படைக்கப்படுவதற்கு முன்னதாக சிவபெருமான் இத்தலத்தில் மலையாக (குன்று வடிவில்) ஆதியில் தோன்றியதால் பழமலை என வழங்கப்பட்டதாக ஞானக்கூத்தரின் விருத்தாசலம் புராணம் தெரிவிக்கிறது. திருஞான சம்பந்தர், அப்பர் சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். இத்திருத்தலத்தில் வீற்றிருந்த சிவபெருமானைப் பாடி சுந்தரமூர்த்தி சுவாமிகள் பன்னீராயிரம் பொன்னை பெற்று இத்திருத்தலத்திற்கு அருகே உள்ள மணிமுத்தாற்றில் இட்டு திருவாரூர் சென்று கமலாலயத்தில் மீண்டும் பொன்னை எடுத்த அற்புதம் நடைபெற்ற சிவத்தலம் இதுவாகும். மூர்த்தி,...