Screen Reader Access     A-AA+
அருள்மிகு புத்துவாயம்மன் திருக்கோயில், கோலியனூர் - 605103, விழுப்புரம் .
Arulmigu Puthuvaiyamman Temple, Koliyanur - 605103, Viluppuram District [TM020381]
×
Temple History

தல பெருமை

அருள்மிகு புத்துவாய் அம்மன் திருக்கோவில் வரலாறு பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி பெருங்காடாக இருந்தபோது பனங்குப்பம் எனும் பகுதியில் இருந்து பசு ஒன்று தினமும் மேய்ச்சலுக்கு வரும்போது காட்டில் அமைந்திருந்த புற்று ஒன்றில் பால் சுரப்பதையும் இதை புற்றில் இருந்து ஒரு நாகம் சாப்பிடுவதையும் கண்ட பசுவின் மேய்ப்பன் தனது எஜமானிடம் கூற அவன் அப்பகுதி மக்களுடன் திரளாக வந்து இந்நிகழ்ச்சியை கண்டு அதிசயித்து மன்னரிடம் கூற, அவன் ஆலோசனைப்படி இப்பகுதி மக்களால் புற்றினை சுற்றி ஆலயம் எழுப்பப்பட்டது. அதுவே தற்போது பல திருப்பணிகள் செய்யப்பட்டு எழில்மிகு ஆலயமாக விளங்குகிறது இத் திருக்கோவிலின் முதன்மை தெய்வம் ரேணுகாம்பாள் ஆகும் , திருக்கோவில் இரண்டாம் கருவறையில் நாக புற்று...

இலக்கிய பின்புலம்

ராமாயணத்தில் பரசுராமர் கதை பரசுராமர் சொல்கிறான். திருமால் தனக்குக் கொடுத்த வில்லை இருசிகன் என் தந்தைக்குக் கொடுத்தான். என் தந்தை எனக்குக் கொடுத்தார். இதனை நீ எளிமையாக வளைப்பாயானால் உன்னோடு நான் போருக்கு வரமாட்டேன் - என்றான் நீ ஒடித்தது ஈன வில்.நீ எனக்கு வழியில் வந்த பகை அரக்கன் ஒருவனைக் கொன்று என் தந்தையின் சீற்றத்தை நீக்கியவன் நான் அரசன் ஒருவன் என் தந்தைக்குக் கொடுமை செய்ததால் அரசர்கள் மீது சலிப்பு ஏற்பட்டு அவர்கள்மீது வெறுப்பு கொண்டிருக்கிறேன். என் தந்தைக்குக் கொடுமை செய்த அரசர் குலத்தவர் 21 உலகங்களில் எங்கு இருந்தாலும் அவர்கள் அனைவரையும் கொன்று என் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தேன். பின்னர் சினம் தணிந்தேன். வென்ற...

புராண பின்புலம்

அம்மனின் வரலாறு ரைவத மகாராஜனின் மகளாக பிறந்த ரேணுகாதேவி, கணவர் ஜமதக்னி முனிவர் இவர்களுக்கு மகனாக பிறந்தவரே விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் ஆகும், பதிவிரதை என்பதால், தினமும் கணவரின் பூஜைக்கு கமண்டல நதியில் இருந்து சுடப்படாத மண்பானையில் தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். அதேபோல் ஒருநாள் தண்ணீர் எடுத்துவரும்போது வான வீதியில் சென்ற கந்தர்வன் நிழலை நீரில் கண்டு அவன் அழகில் மயங்கி ஆச்சர்யம் அடைந்தாள். இதனால் மண் குடம் உடைந்து விடுகிறது. இதை ஜமதக்னி முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார். உடனே மகன் பரசுராமனை அழைத்து தாயின் தலையை வெட்டி கொண்டு வரும்படி உத்தரவிடுகிறார். அதன்படி பரசுராமரும் தாயின் தலையை துண்டித்தார்....