Screen Reader Access     A-AA+
அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், திண்டிவனம் - 604001, விழுப்புரம் .
Arulmigu Lakshminasimma Swamy Temple, Tindivanam - 604001, Viluppuram District [TM020388]
×
Temple History

தல பெருமை

இது காஞ்சி சேத்திரத்தில் சேர்ந்தது, பிரம்மா காஞ்சிபுரத்தில் யாகம் செய்த பொழுது யாக வாசல்கள் வனத்வயம், புறத்வயம் என்ற நான்கு திக்குகளுக்கு நான்கு வாயில்கள் நியமித்தார், வனத்வயம் என்பது வடக்கே நாராயண வனம் வடக்கு எல்லையாகவும், தெற்கே திந்திரிணீவனம் தெற்கு எல்லையகாவும், புறத்வயம் என்பது மேற்கே விருஞ்சீபுறம் மேற்கு எல்லையாகவும், கிழக்கே மகாபலிபுரம் கிழக்கு எல்லையாகவும் சொல்லப்படுகிறது. பர்வம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி உற்சவ முர்த்தியாக இருந்த போதிலும், முர்த்தி உக்ரமாக இருப்பதை முன்னிட்டு மார்கண்டேயர் பிரத்யக்சமாகி காந்த முர்த்தியகா சேவை சாதித்ததாக சொல்லப்படுகின்றது. அது முதல் மேற்படி உற்சவ முர்த்தி வரதராஜருக்கு உற்சவவாதிகள் நடந்து வருகின்றன திந்திரிணிவனத்தில் கிண்டி, முண்டி என்ற ராட்சசர்கள் இருந்ததாகவும் அவர்களை சம்ஹரிப்பதற்கு அனுமாருக்கு சங்கு சக்கரத்தைக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகின்றது,...