முற்காலத்தில் இப்பகுதி புளியமரக்காடுகளாக இருந்தது வட மொழியில் திந்திருணி என்பது புளிய மரங்களை குறிக்கும். எனவே திந்திருணிவனம் என்பது மருவி திண்டிவனம் என வழக்கில் உள்ளது. இத்தலம் காஞ்சி சேத்திரத்தை சார்ந்தது பிரம்மா காஞ்சிபுரத்தில் யாகம் செய்த போதுயாக வாசல்கள் வனத்தையம் புரத்வயம் என்ற நான்கு திசைகளுக்கும் நான்கு வாயில்கள் நியமித்தார். வனத்தையம், என்பது வடக்கே நாராயணவனம் , வடக்கு எல்லையாகவும் தெற்கே திந்திரிணீவனம் தெற்கு எல்லையாகவும் கிழக்கே மகாபல்லிபுரம் கிழக்கு எல்லையாகவும் மேற்கே விரிஞ்சிபுரம் மேற்கு எல்லையாகவும் இருந்தது.பெருமாள் உக்கிரத்தை குறைக்க தாயாரல் மூலமாக மார்கண்டேய மகாரிஷி வேண்டி கொள்ள தாயார் பெருமாளை கை கூப்பி பக்தனுக்கு சாந்த மூர்த்தியாக சேவை சாதிக்கும் படி வேண்டி கொண்டதின் பேரில் சாந்தமூர்த்தியாக...