Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாகம்மன் திருக்கோயில், தாங்கல், தும்பூர் - 605203, விழுப்புரம் .
Arulmigu Nagamman Temple, Thaangal, Thumbur - 605203, Viluppuram District [TM020392]
×
Temple History

தல பெருமை

நாகத்தின் தலைப் பகுதி, தும்பூர் தாங்கலில் நாகாத்தம்மன் என்ற பெயரில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். நடுப்பகுதி சற்றுத் தள்ளி உள்ள வயலில் சிறிய கீற்றுக் கொட்டகையில் அருவமாக இருந்து அருள்பாலிப்பதாக ஐதிகம். பொய் சத்தியம் செய்தாலோ, பொய்சாட்சி சொன்னாலோ என்ன நடக்கும் நீதிமன்றத்தின் மூலமோ அல்லது தெய்வ சக்தியின் மூலமோ அவருக்குத் தண்டனை கிடைத்துவிடும். ஆனால், ஒருவன் செய்த பொய் சத்தியத்தின் காரணமாக, ஓர் அம்மனின் திருவுருவத்தில் பாம்பின் வால் அமைந்திருக்கும் சம்பவமும் உண்டு. அந்தச் சம்பவம் நடைபெற்ற தலம்தான் திருவாமாத்தூர் அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில். அந்தக் கோயிலில் இருக்கும் முத்தாம்பிகை சந்நிதிதான், ஒருவன் செய்த பொய் சத்தியத்தின் காரணமாக ஏற்பட்டது. தெய்வ நம்பிக்கை மிகுந்திருந்த அந்தக் காலத்தில் அரசர்களால் தீர்க்க முடியாத...