Screen Reader Access     A-AA+
அருள்மிகு திந்திரினீஸ்வரர் திருக்கோயில், திண்டிவனம் - 604001, விழுப்புரம் .
Arulmigu Thinthirineeshwar Temple, Tindivanam - 604001, Viluppuram District [TM020396]
×
Temple History

தல பெருமை

இக்கோயில் விமானம் வால்மீகி முனிவரால் பூசிக்கப்பட்டது எனக் குறிப்பிடுவதிலிருந்து இக்கோயில் சங்க காலத்திலேயே இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது மகேந்திரவர்மனை சை வ சமயத்திற்கு மாற்றிய சமயக் குரவர் நால்வருள் ஒருவரான அப்பர் தனது ஷேத்திரக் கோவையில் இத்தலத்தை கயிலாய நாதனைக் காணக் கூடிய இடங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். தெள்ளும் புனற்கெடில வீரட்டமுந் திண்டீச்சுரஞ் சேய்ஞலூரில் கயிலாய நாதனையே காணலாமே எனப் பாடி புகழ்கின்றார் ஈசன் மேவும் தலங்களை ஈச்சரம் என்பர் அவ்வகை ஈச்சரங்களை பட்டியலிட்டு இன்புறும் சமயத்திலும் திருநாவுக்கரசர் இத்தலத்தை மேலும் சிறப்பு படுத்துகிறார்,