Screen Reader Access     A-AA+
அருள்மிகு தில்லைக்காளியம்மன் திருக்கோயில், சிதம்பரம் - 608001, கடலூர் .
Arulmigu Thillaikaliamman Temple, Chidambaram - 608001, Cuddalore District [TM020400]
×
Temple History

தல வரலாறு

திருக்கைலாயத்தில் அருள்மிகு பார்வதிதேவிக்கும் அருள்மிகு பரமேஸ்வரனுக்கும் சிவம் உயர்ந்ததா சக்தி உயர்ந்ததா என்ற விவாதம் ஏற்பட்டது. பார்வதி தேவி சக்திதான் உயர்ந்தது. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று உரைத்தார். பரமேஸ்வரன் சிவமும் சக்தியும் ஒன்றே இவை இரண்டும் இல்லையேல் இப்பிரபஞ்சம் இயங்காது என்று உரைத்து, இதை உலகிற்கு உணர்த்தவும் மேலும் உலகில் உள்ள உயிர்களின் (ஜீவன்களின்) நலன்களை கருத்தில் கொண்டும், பரமேஸ்வரர் பார்வதிதேவியை காளியாக சபித்து விடுகிறார். தன் தவறை உணர்ந்த பார்வதி தேவி சாபவிமோசனம் கேட்க, அதற்கு பரமேஸ்வரன் வரும் யுகங்களில் அரக்கர்கள் குலத்தால் தேவர்கள், முனிவர்கள், நல்லோர்களுக்கு அழிவுகள் ஏற்பட உள்ளன. நீ காளியாய் இருந்து, அவ்வண்ணம் கெடுதல்கள் ஏற்படாதவாறு அரக்கர்களை அடக்கி அழித்து முடிவில் தில்லைவனத்தில்...