அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம் - 606105, கடலூர் .
Arulmigu Piralayakaleyswarar Temple, Pennadam - 606105, Cuddalore District [TM020411]
×
Temple History
தல வரலாறு
தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 2 வது ஆலயம். இந்திரன் தேவலோகத்துக்கு பூ வேண்டி தேவகன்னிகளை பூலோகம் அனுப்பி பூ கொண்டு வர சொன்னான். தேவகன்னிகைகள் பூத்தோட்டத்தில் இருந்த பூவை தேவலோகம் எடுத்து செல்வதற்கு பதில் அங்கே இருந்த சிவலிங்கத்திடம் பக்தி மேலிட அதற்கு பூஜை செய்தார்கள். கன்னியரை காணாத இந்திரன் முதலில் காமதேனு பசுவையும் பின்பு தன்னுடைய ஐராவாத யானையையும் அனுப்பி வைத்தான். அவைகளும் சிவலிங்கத்துக்கு தொண்டு செய்ய இந்திரன் அவைகளை காணாததால் கோபத்துடன் பூலோகம் வந்தான். தன்னால் அனுப்பப்பட்ட அனைவரும் சிவ பூஜை செய்வதை பார்த்து தானும் சிவபூஜை செய்து சிவன் அருள் பெற்று அனைவருடனும் இந்திராலோகம் சென்றான். பெண் (தேவகன்னியர்), ஆ (காமதேனு பசு) மற்றும்...தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 2 வது ஆலயம். இந்திரன் தேவலோகத்துக்கு பூ வேண்டி தேவகன்னிகளை பூலோகம் அனுப்பி பூ கொண்டு வர சொன்னான். தேவகன்னிகைகள் பூத்தோட்டத்தில் இருந்த பூவை தேவலோகம் எடுத்து செல்வதற்கு பதில் அங்கே இருந்த சிவலிங்கத்திடம் பக்தி மேலிட அதற்கு பூஜை செய்தார்கள். கன்னியரை காணாத இந்திரன் முதலில் காமதேனு பசுவையும் பின்பு தன்னுடைய ஐராவாத யானையையும் அனுப்பி வைத்தான். அவைகளும் சிவலிங்கத்துக்கு தொண்டு செய்ய இந்திரன் அவைகளை காணாததால் கோபத்துடன் பூலோகம் வந்தான். தன்னால் அனுப்பப்பட்ட அனைவரும் சிவ பூஜை செய்வதை பார்த்து தானும் சிவபூஜை செய்து சிவன் அருள் பெற்று அனைவருடனும் இந்திராலோகம் சென்றான். பெண் (தேவகன்னியர்), ஆ (காமதேனு பசு) மற்றும் கடம் (வெள்ளையானை) இறைவனை வணங்கியதால் பெண்ணாகடம் என்று பெயர் பெற்றது.
ஒருமுறை ஊழிப்பெருவெள்ளத்தின்போது, இந்த தலம் மட்டும் வெள்ளத்தால் முழுகவில்லை. தேவர்கள் சிவனிடம் உயிர்களை இந்த ஊரில் வைத்து காக்கும்படி வேண்டியதால் சிவன் நந்திக்கு வெள்ளத்தை தடுக்க ஆணை பிறப்பிக்க நந்தி ஊரை நோக்கி திரும்பி வெள்ளத்தை திசை மாற்றி உலக்த்தை காத்தது. இதனால்தான் இறைவன் பிரளயகாலேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அப்பர் சுவாமிகள் இத்திருகோவிலில் திருப்பதிகம் பாடி தன் தோளின்மேல் சூலக்குறியும், இடபக்குறியும் பொறித்தருல பெற்ற தலம். மறைஞானசம்பந்தர் அவதார ஸ்தலம். மெய்கண்டதேவரின் தந்தை அச்சுத காளப்பர் வாழ்ந்த ஊர்.