திருப்பெண்ணாகடம் தலவரலாறு ஊர் பெயர் காரணம் தேவ உலகில் ஒரு நாள் தேவந்திரனுக்கு சிவபூஜை செய்ய பூக்கள் கிடைக்கவில்லை எனவே மண்ணுலகிலிருந்து பூக்களைக் கொய்து வர தேவ உலக பூவையர் இருவரை அனுப்பினான். நில உலகம் முழுவதும் சுற்றி வந்தும் பூக்கள் கிடைக்கப்பெறாத அம்மகளிர் நடு நாட்டின் கண் திருக்கடந்தை என்று அப்போது அழைக்கப்பட்டு வந்த பெண்ணாகடத்திலுள்ள பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில் நந்தவனத்தில் பல வகை பூக்கள் பூத்துக் குலுங்குவதை கேள்விப்பட்டு இந்த நந்தவனத்திற்கு சென்று வேண்டிய மலர்களைக் கொய்தனர். ஆனால் அங்கு அவர்கள் உணர்வு வயப்பட்டார்கள் அங்கு வீற்றிருந்த பிரளயகாலேஸ்வரர் அருளொளியால் ஈர்க்க பெற்றார்கள். தம்மை மறந்த ...