Screen Reader Access     A-AA+
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், எலத்தூர் மோட்டூர் - 606906, திருவண்ணாமலை .
Arulmigu Sivasubramaniya Samy Temple, Elathur Mottur - 606906, Tiruvannamalai District [TM020429]
×
Temple History

தல வரலாறு

27 நட்சத்திரங்களுக்கும் பரிகாரம் வழங்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் முருகபெருமான், சுயம்பு முருகனை காண்பது அரிது அப்படியொரு சுயம்பு வேலனை வணங்கும் பாக்கியத்தை எலத்தூர் மோட்டூர், வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி, நட்சத்திரக்குன்றில் காணலாம். முருகப்பெருமானின் கருணையால் உருவான இத்திருத்தலத்து கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சிதரும் சிறப்பு இங்கு மட்டுமே காண இயலும். 27 நட்சத்திரங்களும், சிவ சர்பமும் முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு இந்த கோயிலைதவிர உலகில் வேறெங்கும் இல்லை. வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதரராக முருகப்பெருமான் அமர்ந்து நித்ய சிவ பூஜை செய்யும் தனிப்பெருமையும் இத்திருதலத்துக்கு உண்டு. இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. காஞ்சிபுராணம், அருணாச்சலபுராணம் வாயிலாகவும் அறியலாம். இக்கோயில் தொடர்பான ஆன்மிக வரலாறு மிகவும்...