Arulmigu Abirameshwarar Temple, Thiruvamathur - 605402, Viluppuram District [TM020502]
×
Temple History
தல பெருமை
திருவாமாத்தூர் தேவார ஸ்தல புராணத்துடன் தொடர்புடைய ஆலயம். வட்டப்பாறை லிங்கத்தின் முன் பொய்சாட்சி சொன்ன தமையனை, அங்கிருந்து 10மைல் தூரம் விரட்டி வந்து இங்கே தான் பழி தீர்த்தாள்.அவளது முகதரிசனம் இவ்வாலயத்தில் கிடைக்கிறது.இந்த நாககன்னியின் வால்தான் ஸ்ரீமுத்தாம்பிகை அம்மன் உடலைச் சுற்றிக் காணப்படுகிறதுபசுக்கள் ஆகிய உயிர்களுக்கு தாயாக இறைவன் அருளும் தலம். இறைவியால் சபிக்கப்பெற்ற பிருங்கி முனிவர் வன்னி மரமாகி இங்கு சாபம் நீங்க பெற்ற தலம் . ராமன் வழிபட்ட தலம் . ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பு இல்லாமல் படைக்கப்பட்டன . தெய்வ பசுவாகிய காமதேனு தன்னை அழிக்கவரும் மற்ற மிருகங்களிடம் தன்னை காத்துக்கொள்ள கொம்பு வேண்டும் என்று நந்தி தேவரிடம் முறையிட்டது அவரும் அவர்கள் கேட்பது சரியே...திருவாமாத்தூர் தேவார ஸ்தல புராணத்துடன் தொடர்புடைய ஆலயம். வட்டப்பாறை லிங்கத்தின் முன் பொய்சாட்சி சொன்ன தமையனை, அங்கிருந்து 10மைல் தூரம் விரட்டி வந்து இங்கே தான் பழி தீர்த்தாள்.அவளது முகதரிசனம் இவ்வாலயத்தில் கிடைக்கிறது.இந்த நாககன்னியின் வால்தான் ஸ்ரீமுத்தாம்பிகை அம்மன் உடலைச் சுற்றிக் காணப்படுகிறதுபசுக்கள் ஆகிய உயிர்களுக்கு தாயாக இறைவன் அருளும் தலம். இறைவியால் சபிக்கப்பெற்ற பிருங்கி முனிவர் வன்னி மரமாகி இங்கு சாபம் நீங்க பெற்ற தலம் . ராமன் வழிபட்ட தலம் . ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பு இல்லாமல் படைக்கப்பட்டன . தெய்வ பசுவாகிய காமதேனு தன்னை அழிக்கவரும் மற்ற மிருகங்களிடம் தன்னை காத்துக்கொள்ள கொம்பு வேண்டும் என்று நந்தி தேவரிடம் முறையிட்டது அவரும் அவர்கள் கேட்பது சரியே என்று எண்ணி பம்பை நதிக்கரையில் உள்ள உள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் நோக்கி இத்தலத்தில் தவம் இருக்குமாறு கூறினார் .அவ்வாறே பசுக்களும் பல நாள் தவம் செய்து கொம்புகளை பெற்றன .பசுக்கள் பூஜித்த தளம் என்பதால் திருமாத்தூர் என்று பெயர் பெற்றது .இத்தலத்தை பற்றி யார் புகழ்ந்து பேசினாலும் ,கேட்டாலும் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று தலபுராணம் கூறுகிறது .மிகவும் பழமையான தலமாகும் .