Arulmigu Valieswarar Temple, Koliyanur - 605103, Viluppuram District [TM020513]
×
Temple History
தல பெருமை
இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் பெயர் அருள்மிகு வாலீஸ்வரர், அம்பாள் பெரிய நாயகி என அழைக்கப்படுகிறாள்.
இத்திருக்கோயிலின் வடமேற்குத் திசையில் நடராஜர் சபை உள்ளது. சபையிலேஅருள்மிகு நாடராஜர் அற்புத நடனத் புரியம் காட்சி கண்கொள்ளாக் காட்சியானதாகும். இந்த நடராஜர் சென்ற நூற்றாண்டில் குயவர்கள் மண்பாண்டம் செய்ய மண் எடுத்த பள்ளத்தில் இருந்து கிடைக்கப்பெற்றதால் இவர் குயவன் நடராஜர் என அழைக்கப்படுகிறார். திருக்கோயிலின் தென் கிழக்கு மூலையில் அருள்மிகு சனீஸ்வர பகவான் அஷ்டகோள்களின் கூட்டின்றி தனியே தெற்கு நோக்கி நின்ற்வண்ணம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஒருமுறை இலங்கேஸ்வரனான ராவணன் தேவர் மூவரோடு நவக்கிரகங்களையும் கைது செய்து சிறையில் அடைந்தார். அச்சமயம் பிரம்மபுத்திரராகிய நாரதர் இலங்கை சென்று சனீஸ்வரனை சந்தித்தார். அவர் இன்னும்...இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் பெயர் அருள்மிகு வாலீஸ்வரர், அம்பாள் பெரிய நாயகி என அழைக்கப்படுகிறாள்.
இத்திருக்கோயிலின் வடமேற்குத் திசையில் நடராஜர் சபை உள்ளது. சபையிலேஅருள்மிகு நாடராஜர் அற்புத நடனத் புரியம் காட்சி கண்கொள்ளாக் காட்சியானதாகும். இந்த நடராஜர் சென்ற நூற்றாண்டில் குயவர்கள் மண்பாண்டம் செய்ய மண் எடுத்த பள்ளத்தில் இருந்து கிடைக்கப்பெற்றதால் இவர் குயவன் நடராஜர் என அழைக்கப்படுகிறார். திருக்கோயிலின் தென் கிழக்கு மூலையில் அருள்மிகு சனீஸ்வர பகவான் அஷ்டகோள்களின் கூட்டின்றி தனியே தெற்கு நோக்கி நின்ற்வண்ணம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஒருமுறை இலங்கேஸ்வரனான ராவணன் தேவர் மூவரோடு நவக்கிரகங்களையும் கைது செய்து சிறையில் அடைந்தார். அச்சமயம் பிரம்மபுத்திரராகிய நாரதர் இலங்கை சென்று சனீஸ்வரனை சந்தித்தார். அவர் இன்னும் சிலதினங்களில் கிஷ்கிந்தாபுரி அரசன் வாலி இவ்விடம் வருவான் அவனால் நீ மீட்கப்படுவாய் அதன் பின்னர் நீ உனது முழுப்பார்வையை இலங்காவுரி மீது செலுத்து அப்போது இலங்கை நகரமே அழியும் எனக் கூறிச் சென்றார்.
அவ்வாறே இலங்கை நகருக்கு வாலி வரும்போது தன்னை மீட்டுச் செல்லும்படி சனி பகவான் வேண்ட வாலியும் அவரை மீட்டு தட்சிணப்பினாக்கினி என்னும் தென்பெண்ணை ஆற்றின்வடகரையில் கோயில் நகரில் வாலி தீர்த்தக்கரையில் அருள்மிகு வாலீஸ்வர சுவாமி சன்னதியில் அவருக்குச் சொந்தமான வன்னி மரத்தின் அடியில் அஷ்ட கிரகங்களின் தொடர்பு இல்லாமல் ஏகாங்கியாய் தெற்கு முகமாய் இலங்காபுரியை அழிக்க முழுப்பார்வையும் செலுத்தி அவ்விடத்திலேயே தங்க வைத்தான்.
பின்னர் வாலி திருக்கோயிலின் அருகிலேயே ஒரு தீர்த்தத்தை உற்பத்தி செய்து அதில் நீராடி இறைவனை வணங்கிச் சென்றான். அதனாலேயே இத்தலத்து இறைவன் வாலீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மேற்கு நோக்கிய சன்னதியில் தெற்கு நோக்கிய அம்மாள் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
இத்திருக்கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வாலி தீர்த்தத்தில் நீராடி சனி பகவானின் அருள் வேண்டி செல்வார்கள். எனவே இத்திருக்கோயில் வடதிருநாள்ளாறு என அழைக்கப்படுகிறது.
மேலும இத்திருக்கோயிலின் வடக்குப் புறத்தில் அருள்மிகு சுப்ரமணியர் சன்னதியும் கோஷ்டத்தில் பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்கை, விஷ்ணு, தட்சணாமூர்த்தி மற்றும் நின்ற விநாயகர் ஆகிய தெய்வ உருவங்கள் அமைந்து அருளைத் தருகின்றனர்.