இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் பெயர் அருள்மிகு வாலீஸ்வரர், அம்பாள் பெரிய நாயகி என அழைக்கப்படுகிறாள். இத்திருக்கோயிலின் வடமேற்குத் திசையில் நடராஜர் சபை உள்ளது. சபையிலேஅருள்மிகு நாடராஜர் அற்புத நடனத் புரியம் காட்சி கண்கொள்ளாக் காட்சியானதாகும். இந்த நடராஜர் சென்ற நூற்றாண்டில் குயவர்கள் மண்பாண்டம் செய்ய மண் எடுத்த பள்ளத்தில் இருந்து கிடைக்கப்பெற்றதால் இவர் குயவன் நடராஜர் என அழைக்கப்படுகிறார். திருக்கோயிலின் தென் கிழக்கு மூலையில் அருள்மிகு சனீஸ்வர பகவான் அஷ்டகோள்களின் கூட்டின்றி தனியே தெற்கு நோக்கி நின்ற்வண்ணம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஒருமுறை இலங்கேஸ்வரனான ராவணன் தேவர் மூவரோடு நவக்கிரகங்களையும் கைது செய்து சிறையில் அடைந்தார். அச்சமயம் பிரம்மபுத்திரராகிய நாரதர் இலங்கை சென்று சனீஸ்வரனை சந்தித்தார். அவர் இன்னும்...