Arulmigu Aranganadhasamy Temple, Hill Top, Singavaram - 604202, Viluppuram District [TM020602]
×
Temple History
தல பெருமை
திருத்தல வரலாறு
சுவாமி ரங்கநாதர்
தாயார் ரங்கநாயகி
பெயர்க்காரணம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், செஞ்சிக்கு வடக்கே 4 கி.மீ. தொலைவில் சிங்கவரம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த ஊர் முற்காலத்தில் விஷ்ணு செஞ்சி என்றும், திருப்பன்றி குன்றம் என்றும், சிங்கபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இத்திருக்கோயில் மலை மீது அமைந்துள்ள அழகிய திருக்கோயிலாகும். கி.பி.570 முதல் 620க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆதாரம் மகேந்திர வர்மன் திருக்கோயில் என்ற புத்தகம் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு காலத்தில் உண்டாக்கப்பட்டதாகவும், பின் அவர் மகன் முதலாம் மகேந்திர வர்மன் காலத்தில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தல வரலாறு
இத்திருக்கோயிலில் 6.ம் நுற்றாண்டுகளுக்கு முன்பாக வராகர் திருக்கோயிலாக விஷ்ணு துரக்கையுடன் இருந்ததாகவும், அதன் பின்பு தான் ரங்கநாதர் குடவரை செதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இத்திருக்கோயில் அடிவாரத்திலிருந்து...திருத்தல வரலாறு
சுவாமி ரங்கநாதர்
தாயார் ரங்கநாயகி
பெயர்க்காரணம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், செஞ்சிக்கு வடக்கே 4 கி.மீ. தொலைவில் சிங்கவரம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த ஊர் முற்காலத்தில் விஷ்ணு செஞ்சி என்றும், திருப்பன்றி குன்றம் என்றும், சிங்கபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இத்திருக்கோயில் மலை மீது அமைந்துள்ள அழகிய திருக்கோயிலாகும். கி.பி.570 முதல் 620க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆதாரம் மகேந்திர வர்மன் திருக்கோயில் என்ற புத்தகம் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு காலத்தில் உண்டாக்கப்பட்டதாகவும், பின் அவர் மகன் முதலாம் மகேந்திர வர்மன் காலத்தில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தல வரலாறு
இத்திருக்கோயிலில் 6.ம் நுற்றாண்டுகளுக்கு முன்பாக வராகர் திருக்கோயிலாக விஷ்ணு துரக்கையுடன் இருந்ததாகவும், அதன் பின்பு தான் ரங்கநாதர் குடவரை செதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இத்திருக்கோயில் அடிவாரத்திலிருந்து மலைக்கு செல்ல 160 படிகள் உள்ளன. படிகளில் ஏறி மேலே சென்றால், மூன்று நிலை இராஜகோபுரம், அதன் பின் வரதராஜ பெருமாள் திருக்கோயிலும் அமைந்துள்ளது. வரத ராஜ பெருமாள் கோயில் கிருஷ்ண தேவராயர் செஞ்சியை ஆண்டபோது கட்டியதாக கூறப்படுகிறது. வரதராஜ பெருமாள் சன்னதியை ஒட்டி சந்திர புஷ்கரணி என்ற திருக்குளம் உள்ளது. முகப்பு மண்டபம் வழியாக உள்ளே சென்றால் ரங்கநாயகி தாயார் சன்னதி, துர்கை சன்னதி உள்ளது. துர்கையும், மேல் பகுதியில் 24 அடி நீளம் குடையப்பட்டு 10 அடி அகலத்தில் கருவறையாக கொண்டு அரங்கன் யோக நிலையில் காட்சி தருகிறார். இத்திருக்கோயில் மூலவரான ரங்கநாதர் ஸ்ரீரங்கம் அரங்கநாதர், திருப்பாற்கடல் திருமால் விட பெரிய உருவமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இயற்கை எழில் கொஞ்சும் அழகிய குன்றின் மீது கோயில் கொண்டுள்ள எம்பெருமானின் மணி மண்டபத்தை கடந்து சென்றால் ஒரே கல்லில் செதுக்கிய கலைப் பொக்கிஷமாக அரங்கன் காட்சி தருகிறார். தெற்கு திசையில் தலைக்கு மரக்கால் படியை வைத்து, வடக்கில் பாதங்கள் உள்ளவாறு பள்ளிகொண்டு பெருமாள் காட்சி தரும் அழகே தனி. தலையைச் சற்று துக்கியவாறு,வலது திருக்கரத்தை கீழே தொங்க விட்டபடியாகவும், வலது கையை மேற்புறமாக மடித்து, கடக முத்திரையை காட்டி, ஐந்து தலை நாகத்தின் மேல் திருமால் அழகுற நித்திரை புரியும் அற்புத காட்சியைக் காண கண் கோடி வேண்டும்.
ஒரே கல்லில் குடைந்து இந்தப் பெருமாள் திருமேனியை வடித்துள்ளனர். மிகப்பெரிய பெருமாளான இவரை மூன்று வாயில்கள் வழியாகச் சென்று தான் முழுமையாக தரிசிக்க முடியும். முதல் நிலையில் பெருமாள் திருமுகம், மேலிருக்கும் பஞ்சமுக ஆதிசேஷன், வலது திருக்கரம், நாபிக்கமலத்தில் கந்தர்வ பிரம்மா, மார்பில் மகாலட்சுமி ஆகியோரை தரிசிக்கலாம். மத்திய பாகத்தில் ஸ்ரீகருடன் தரிசிக்கலாம். மூன்றாம் நிலையில் திருவடி, அதன் கீழ் பூமா தேவி, நாரதர், பிரகலாதன், பிருகு, அத்திரி போன்ற முனிவர்களை காணலாம்.
உப சன்னதிகள்
ஸ்ரீ வரதராஜ பெருமாளையும் பூதேவி,ஸ்ரீதேவியுடன் தனி சன்னதியில் தரிசிக்கலாம்.தாயார் ரங்கநாயகி தனியே அருள்பாலிக்கிறார். ஸ்ரீ நிகமாந்த மகா தேசிகன் சிலை வடிவமும் உள்ளது. மேலும், சக்கரத்தாழ்வார், ராமானுஜர், கருடாழ்வார், ஆஞ்சநேயர், லட்சுமி வராகர் ஆகியோர் தனி சன்னதி கொண்டுள்ளனர்.
புராண வரலாறு
இப்பெருமாளிடம் செஞ்சியை ஆண்ட தேசிங்குராஜன் 1714ஆம் ஆண்டில் மாலிக்காபூர் படையெடுப்பின் போது போருக்கு போவதாக கூறி விடை கேட்டதாகவும், அதற்கு பெருமாள் இன்று உன்னுடைய ஜென்ம நட்சத்திர நாள். அதனால் போருக்கு போக வேண்டாம், தோல்வியை தழுவுவாய் என அசரீரியாக கூறியுதாகவும், அதற்கு தேசிங்குராஜன் நான் சத்திரியன், போருக்கு புறப்பட்டு வந்து விட்டேன், முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன், போருக்கு போய் தீருவேன் என கூறியதாவும், அதற்கு பெருமாள் தலையை திருப்பிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இப்போதும் ரங்கநாதர் முகம் திரும்பிய நிலையில் இருப்பதை காணலாம்.
மேலும், முஸ்லீம் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் உற்சவர் 1 வருடம் இத்திருக்கோயிலில் தங்கயிருந்ததாக வரலாறு உண்டு. செஞ்சியை ஆண்ட கோபண்ணா என்பவரால் ஸ்ரீரங்கத்திலிருந்து செஞ்சிக்கு 1370ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதாகவும், பின்னர் 1371ம் ஆண்டு செஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம் எடுத்து செல்லப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் திருவரங்கன் உலா என்ற புத்தகத்தில் கூறப்படுகிறது. இதற்கு கல்வெட்டு ஆதாரமும் உள்ளது.
முக்கிய திருவிழாக்கள்
இத்திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பும், மாசி பிரம்மோற்சவ தேரோட்டம், மாசி மக தீர்த்தவாரி ஆகியவை சிறப்பான விழாக்களாகும்.
இருப்பிடம்/அமைவிடம்
1 சென்னையில் இருந்து 175 கி.மீ
2 திருவண்ணாமலையிலிருந்து 40 கி.மீ
3 விழுப்புரத்திலிருந்து செஞ்சி வழி 66 கி.மீ
4 புதுச்சேரியிலிருந்து திண்டிவனம், செஞ்சி வழி 90 கி.மீ.
பூஜை நேரம்
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
நிர்வாகம்
இத்திருக்கோயில் மேல்மலையனுர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலின் உதவிஆணையர்/செயல்அலுவலரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலுக்கு செஞ்சி பிரிவு ஆய்வர் தக்காராக உள்ளார்.
இத்திருக்கோயிலில் தினசரி இரண்டு கால பூசைகள் நடைபெற்று வருகிறது.