Screen Reader Access     A-AA+
அருள்மிகு மார்க்க சகாயேஸ்வரர் திருக்கோயில், ஒரத்தூர் - 608201, கடலூர் .
Arulmigu Marksagayaeswarar Temple, Orathur - 608201, Cuddalore District [TM020653]
×
Temple History

தல வரலாறு

மார்க்கசகாயீஸ்வரர் என்பது வடமொழி சொல் ஆகும். எனவே வழித்துணை நாதர் என்னும் பெயர் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது . மேற்படி திருக்கோயில் அமைந்துள்ள ஒரத்தூர் கிராமத்திற்கு மேற்கே கூடலையைத்துர் என்னும் சிற்றூர் உள்ளது. பெண்ணாடம் அருள்மிகு ப்ரளயகாலேஸ்வரர் திருக்கோயிளுக்கு சுவாமி தரிசனம் செய்யவேண்டி சென்ற சுந்தரர் பெருமான் கூடலையைத்துரில் உள்ள சிவபெருமானை தரிசிக்காமல் நேராக பெண்ணாடம் செல்ல எத்தனித்ததாகவும், சுந்தரரின் இச்செயலை சுவாமி சுந்தரரின் கனவில் வந்து உணர்த்தியதை தொடர்ந்து கூடலையைத்துர் செல்வதற்கு வழி தெரியாமல் நின்றிருந்த சுந்தரருக்கு வழிகாட்டிய பெருமான் ஆதலால் மார்க்கசகாயேஸ்வரர் என்றும் வழித்துணை நாதர் என்றும் பெயர் விளங்கியதாக சொல்லப்படுகிறது.