தல பெருமை
இத்திருக்கோயிலில் ஸ்ரீவாமனபுரீஸ்வரர் உள்ள மூலஸ்தானம் எப்பாேதும் பீம ருத்ரா் படம் வரையப்பட்ட திரையால் மூடப்பட்டிருக்கும் . இத்தல இறைவனை எப்போதும் விஷ்ணு வழிபடுவதாகவும் அதற்கு இடையூறு ஏற்படாதவாறு பீம ருத்ரா் காவல் காப்பதாக வரலாறு. முதலில் இத்திரைக்கு தீபாராதனை செய்து திரையை நகா்த்தி சிவனுக்கு தீபாராதனை செய்வாா்கள். அப்போது மட்டும்தான் இத்தல இறைவனை தாிசிக்க முடியும். இங்கு பள்ளியறை கிடையாது. மூலஸ்தானமே பள்ளியறை ஆகும்.