Screen Reader Access     A-AA+
அருள்மிகு குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில், கோயம்பேடு, சென்னை - 600107, சென்னை .
Arulmigu Kurungaleeshwarar And Vaikundavasa Perumal Temple, Koyambedu, Chennai - 600107, Chennai District [TM000207]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது, வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்திருக்கோயில் விளங்கி வருகிறது. சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு குறுங்காலீஸ்வரர் என்ற பெயர் உண்டானது. குசலவம் என்றால் குள்ளம் என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.

தல பெருமை

அயோத்தியில் ராமபிரான் ஆட்சிப்பொறுப்பற்ற பின்பு, சீதையன் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் பேசினர். சீதையின் கற்பை நிருபிக்க ராமார் சீதையை வனத்திற்கு அனுப்பினார் வால்மீகி ஆசிரமத்தில் தங்கிய சீதை, லவன், குசன் என்னும் இரு மகன்களை பெற்றெடுத்தாள் . ராமர் தனது தந்தை என தெரியாமலேயே, லவகுசர் வளர்ந்தனர். இந்நேரத்தில் ராமபிரான், அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அங்கு வால்மீகி முனிவரின் உத்தரவின் பேரில் சென்ற லவகுசர், மனைவி இல்லாமல் அஸ்வமேத யாகம் நடத்துவது சாஸ்திர விரோதம் என்பதாலும், சீதாவை காட்டுக்கு அனுப்பிவிட்டதை அறிந்தும் ராமபிரான் மீது கோபம்மடைந்து தாங்கள் வசித்த வனத்துக்கே திரும்பி விட்டனர். அப்போது ஒரு யாகக் குதிரை லவகுசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அவற்றை கட்டிபோட்டுவிட்டனர். குதிரையுடன்...