அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், சிறகிழந்தநல்லூர் - 608302, கடலூர் .
Arulmigu Gnanapurieswarar Temple, Sirakizhanda Nallur - 608302, Cuddalore District [TM020732]
×
Temple History
தல வரலாறு
ஒரு காலத்தில் துர்வாச முனிவர் ஆழ்ந்த தவத்தில் இருந்த சமயம் ஆகாய வழியில் கந்தர்வர்கள் சிலர் தங்கள் தங்க விமானங்களில் சென்றனர். அவர்களில் தேவதத்தன் என்ற கந்தர்வன் பழங்களை உண்ட பின்னர் கீழே போட்ட கொட்டைகள் துர்வாசர் மீது விழ முனிவரின் தவம் கலைந்தது. மிகுந்த கோபத்தில் அவர் கந்தர்வனை, பழக்கொட்டைகளை பறவை போல் உதிர்த்ததால் நாரையாகப் போக சாபமிட்டார். சாபவிமோசனம் வேண்டிய நாரையிடம் அங்கேயே தங்கியிருந்து கங்கை நீர் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்து வழிபட சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார்.சாப விமோசனம் தர இறைவன் விரும்பினார்,பரீட்சை வைத்து தானே பாஸ் போட முடியும்.அவ்வாறே செய்து வந்த நாரைக்கு, ஒருநாள் சோதனை நேர்ந்தது. காசியிலிருந்து கங்கை நீர் கொண்டு...ஒரு காலத்தில் துர்வாச முனிவர் ஆழ்ந்த தவத்தில் இருந்த சமயம் ஆகாய வழியில் கந்தர்வர்கள் சிலர் தங்கள் தங்க விமானங்களில் சென்றனர். அவர்களில் தேவதத்தன் என்ற கந்தர்வன் பழங்களை உண்ட பின்னர் கீழே போட்ட கொட்டைகள் துர்வாசர் மீது விழ முனிவரின் தவம் கலைந்தது. மிகுந்த கோபத்தில் அவர் கந்தர்வனை, பழக்கொட்டைகளை பறவை போல் உதிர்த்ததால் நாரையாகப் போக சாபமிட்டார். சாபவிமோசனம் வேண்டிய நாரையிடம் அங்கேயே தங்கியிருந்து கங்கை நீர் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்து வழிபட சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார்.சாப விமோசனம் தர இறைவன் விரும்பினார்,பரீட்சை வைத்து தானே பாஸ் போட முடியும்.அவ்வாறே செய்து வந்த நாரைக்கு, ஒருநாள் சோதனை நேர்ந்தது. காசியிலிருந்து கங்கை நீர் கொண்டு வரும் போது கடும் புயலும் மழையும் வீச, பறக்க முடியாமல் தவித்த நாரையின் சிறகுகள் காற்றின் வேகத்தால் பிய்ந்து விழுந்தன.அவ்வாறு நாரையின் சிறகுகள் விழுந்த இடம், சிறகிழந்த நல்லூர் என வழங்கப்படுகிறது. அவ்வூர் திருநாரையூரிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ளது.சிறகிழந்து சிரமப்பட்ட நிலையிலும் தவழ்ந்து வந்து வழிபட்டு மோட்சம் பெற்றது நாரை. அதனால் நாரை ஊர் திருநாரையூர் என்று வழங்கப்பட்டது.
இந்த வரலாறு நிகழ்ந்த தலமான சிறகிழந்த நல்லூரை காண்போம் வாருங்கள். காட்டுமன்னார்கோயில்- சிதம்பரம் பிரதான சாலையில் ஒன்பதாவது கிமீ ல் தெற்கு நோக்கி செல்லும் பாதையில் சென்று பெரிய ஓடை ஒன்றினை தாண்டினால் சிறகிழந்த நல்லூர் தான்.இங்கு கிழக்கு நோக்கிய அழகிய சிறிய கோயிலில் ஞானபுரீஸ்வரர், ஞானாம்பிகை வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர்.