ஒரு காலத்தில் துர்வாச முனிவர் ஆழ்ந்த தவத்தில் இருந்த சமயம் ஆகாய வழியில் கந்தர்வர்கள் சிலர் தங்கள் தங்க விமானங்களில் சென்றனர். அவர்களில் தேவதத்தன் என்ற கந்தர்வன் பழங்களை உண்ட பின்னர் கீழே போட்ட கொட்டைகள் துர்வாசர் மீது விழ முனிவரின் தவம் கலைந்தது. மிகுந்த கோபத்தில் அவர் கந்தர்வனை, பழக்கொட்டைகளை பறவை போல் உதிர்த்ததால் நாரையாகப் போக சாபமிட்டார். சாபவிமோசனம் வேண்டிய நாரையிடம் அங்கேயே தங்கியிருந்து கங்கை நீர் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்து வழிபட சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார்.சாப விமோசனம் தர இறைவன் விரும்பினார்,பரீட்சை வைத்து தானே பாஸ் போட முடியும்.அவ்வாறே செய்து வந்த நாரைக்கு, ஒருநாள் சோதனை நேர்ந்தது. காசியிலிருந்து கங்கை நீர் கொண்டு...