அருள்மிகு திருமூலநாதர் சுவாமி திருக்கோயியல், திருமூலஸ்தானம் - 608301, கடலூர் .
Arulmigu Tirumulanadhasamy Temple, Thirumoolasthanam - 608301, Cuddalore District [TM020736]
×
Temple History
தல வரலாறு
இக்கோயில் மிக பழமையான கோயில் ஆகும் கிபி 968ல் இரண்டாம் ஆதித்தனால் கட்டப்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர். இக்கோயிலில் 23 கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. 1946ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. விருதராஜ பயங்கர வளநாட்டில் வீரநாராயண சதுர்வேதி மங்கலத்தில் அமைந்துள்ளது. இரண்டாம் ஆதித்தன், பரகேசரி, ராஜகேசரி, முதலாம்ராஜேந்திரன், முதலாம்குலோத்துங்கன் விக்கிரமசோழன், இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜன் ஆகிய கல்வெட்டுக்கள் கிரந்தம் தமிழும் கலந்த நடையில் உள்ளன.இக்கோயில் மிக பழமையான கோயில் ஆகும் கிபி 968ல் இரண்டாம் ஆதித்தனால் கட்டப்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர். இக்கோயிலில் 23 கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. 1946ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. விருதராஜ பயங்கர வளநாட்டில் வீரநாராயண சதுர்வேதி மங்கலத்தில் அமைந்துள்ளது. இரண்டாம் ஆதித்தன், பரகேசரி, ராஜகேசரி, முதலாம்ராஜேந்திரன், முதலாம்குலோத்துங்கன் விக்கிரமசோழன், இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜன் ஆகிய கல்வெட்டுக்கள் கிரந்தம் தமிழும் கலந்த நடையில் உள்ளன.
தல பெருமை
கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து தென்மேற்கு 26கி.மீ. தூரத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டம், இதிலிருந்து கிழக்கே 2கி.மீ தூரத்தில் புண்ணிய சிவத்தலமான திருமூலஸ்தானம் அமைத்துள்ளது. இதன் மிக அருகாமையில் திருநாரையூர்,சதுர்வேதமங்கலம், கானாட்டுமுள்ளூர், ராஜேந்திரசோழகன், மேலக்கடம்பூர், ஒமாம்புலியூர் உள்ளது.
திருமந்திரம் படைத்த திருமூலர் சிதம்பரம், திருவிடைமருதூர் செல்லும் வழியில் இத்திருத்தலத்தில் பலகாலம் தங்கி இங்கு உறைந்துள்ள சிவபெருமானை வணங்கியுள்ளார். திருமூலர் வணங்கியதால் இந்த சிவனாருக்கு திருமூலநாதர் எனப் பெயராயிற்று. இதனால் இவ்வூர் திருமூலஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.
இங்குள்ள திருமூலநாதர் நோய் தீர்க்கும் ஆண்டவனாக உள்ளார். 3 முழு அளவே உள்ள சிவலிங்கத்திருமேனி ஆகம முறைப்படி நோய் தீர்க்கவே அமைந்துள்ளது. இத்தலத்தின் தனிசிறப்பாகும்.
இந்கு சனீஸ்வரன் விநாயகரை பிடிக்க வரும்போது விநாயக்பெருமான் தெற்கு அமர, அது முடியாமல் போகவே சனீஸ்வரனும்...கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து தென்மேற்கு 26கி.மீ. தூரத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டம், இதிலிருந்து கிழக்கே 2கி.மீ தூரத்தில் புண்ணிய சிவத்தலமான திருமூலஸ்தானம் அமைத்துள்ளது. இதன் மிக அருகாமையில் திருநாரையூர்,சதுர்வேதமங்கலம், கானாட்டுமுள்ளூர், ராஜேந்திரசோழகன், மேலக்கடம்பூர், ஒமாம்புலியூர் உள்ளது.
திருமந்திரம் படைத்த திருமூலர் சிதம்பரம், திருவிடைமருதூர் செல்லும் வழியில் இத்திருத்தலத்தில் பலகாலம் தங்கி இங்கு உறைந்துள்ள சிவபெருமானை வணங்கியுள்ளார். திருமூலர் வணங்கியதால் இந்த சிவனாருக்கு திருமூலநாதர் எனப் பெயராயிற்று. இதனால் இவ்வூர் திருமூலஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.
இங்குள்ள திருமூலநாதர் நோய் தீர்க்கும் ஆண்டவனாக உள்ளார். 3 முழு அளவே உள்ள சிவலிங்கத்திருமேனி ஆகம முறைப்படி நோய் தீர்க்கவே அமைந்துள்ளது. இத்தலத்தின் தனிசிறப்பாகும்.
இந்கு சனீஸ்வரன் விநாயகரை பிடிக்க வரும்போது விநாயக்பெருமான் தெற்கு அமர, அது முடியாமல் போகவே சனீஸ்வரனும் அருகில் அமர்ந்து காட்சியளிப்பதால் இருவரையும் ஒன்று சேர்ந்து வணங்கும் பேறு இத்தலத்தை வணங்குவோருக்கு கிடைப்பது இத்தலத்திற்கே உண்டு. இதனால் இங்கு வந்து வணங்குவோரின் தோழங்கள் யாவும் பணிபோல் நீங்குகிறது. இதனால் இத்தலம் சின்னதிருநள்ளாறு எனச்சிறப்பும் பெற்றுள்ளது.
ஆண்டின் சித்திரை மாதத்தின் முதல் வாரத்தில் சூரிய ஒளி அதிகாலையில் சிவலிங்கதிருமேனியின் மூது விழுவதைக் காண்பது நாம் பிறந்த பயனாகும். எனவே சூரியனும் திருமூலநாதரை வணங்கும் தலமாக இது அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் அமைந்துள்ள விநாயகபெருமான் அரக்கியினை அழித்ததால் இங்குள்ள விநாயகபெருமானுக்கு கொடுங்கோல் ஒழித்த கணபதி எனப்பெயர் உண்டு. முப்பெரும் தேவியர்கள் இத்திருமூலநாதரை வணங்கியதாக கூறப்படுகிறது.