Screen Reader Access     A-AA+
அருள்மிகு கன்னிகாபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை - 606601, திருவண்ணாமலை .
Arulmigu Kannigaparameswari Amman Temple, Tiruvannamalai - 606601, Tiruvannamalai District [TM020801]
×
Temple History

புராண பின்புலம்

அன்னை சக்தி தேவி சாபத்தால் பூலோகத்தில் பெண்ணாகப் பிறக்க வேண்டிய நிலை உருவானது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரிக் கரையருகே இருக்கும் பேனுகொண்டா நகரத்தில் விருபாட்சன் - வாஸம்பா தம்பதிகளுக்கு சித்திரை மாத வளர்பிறை தசமியில் தெய்வத்திருமகளாக அவதரித்தார் ஸ்ரீவாசவி. குசுமாம்பிகா என்பது அன்னையின் இயற்பெயர். அழகிய மங்கையாக வளர்ந்த அன்னையைக் கண்டு ஆசைப்பட்டான் விஷ்ணுவர்த்தனர் என்ற அண்டை நாட்டு அரசன். தனக்குத் திருமணம் செய்து தராவிட்டால் அந்த ஊரையே அழித்து விடுவதாகவும் மிரட்டினான். ஊரே கூடி அன்னை வாசவி என்ன முடிவெடுக்கப்போகிறார் என்ற நிலையில் ஊரையும், தனது இனத்தையும் காக்க ஸ்ரீவாசவி தீயில் பாய்ந்து உயிரைவிட்டார். அவரோடு 102 பேர்களும் சேர்ந்து மாய்ந்தனர். பல நூறு பேர்களின் உயிரைக் காக்க தன்னையே...