Screen Reader Access     A-AA+
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காஞ்சி - 606702, திருவண்ணாமலை .
Arulmigu Balasubramaniyasamy Temple, Kanji - 606702, Tiruvannamalai District [TM020824]
×
Temple History

தல வரலாறு

குன்றுமேடு முருகர் என கிராம பொதுமக்களால் அழைக்கப்படும் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் சிறிய மலைக்குன்றின் மீது அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கற்காளால் கட்டப்பட்ட கற்பகிரகம் மற்றும் அர்த்த மண்டபம், முன்மண்டபம் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ள விமானத்தையும் கொண்டுள்ளது. இத்திருக்கோயில் 300 ஆண்டுகளுக்கு முன்பு செய்யாற்றங்கரையில் வடமேற்கு பகுதியில் சிறிய குன்றின் மீது சின்னய்ய சித்தர் என்பவரால் திருவேல் ஊன்றி அழகுற அமைந்த அருள்மிகு வள்ளி தெயவானை உடனுறை அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலானது கட்டப்பட்டது. மேலும் திருக்கோயில் இராஜகோபுரமானது கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது.