Arulmigu Dhenupureeshwarar Temple, Madampakkam, Chennai - 600126, Chengalpattu District [TM000213]
×
Temple History
தல பெருமை
ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் அருள்பாலிக்கும் இத்திருக்கோயில் பத்தாம் நூற்றாண்டில் (கி.பி 954-971) சுந்தரசோழன் எனும் இரண்டாம் பராந்தக சோழன் மற்றும்சோழப்பேரரசைச் சார்ந்த அநிருத்த பிரம்மாதிராஜன் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் உலகுய்ய வந்த சோழன் முதலால் குரோத்துங்கன் காலத்தில் கற்றளழியாக மாற்றப்பட்டு இருக்கலாம். இத்காரணத்தொட்டு மாடம்பாக்கம் என்ற இந்த சிவஸ்தலத்திற்கு அநிருத்தமங்கலம், உலகுய்யவந்த சோழர் சதுர்வேதிமங்கலம் என்ற காரணப் பெயர்களும் உண்டு. தூங்கானை மாட (கஜபிரஷ்டம்) வழவில் அமைக்கப்பட்ட கர்ப்பக்கிரகம் இத்திருக்கோயிலின் சிறப்பம்சமாகும் மற்றும் அர்த்தமண்டம், முன் மண்டபம் உயரிய சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த தூண்கள் கொண்ட முக மண்டபமும் மேன்மை மிக்க கலை பண்பாட்டையும் தெய்வீகத் தன்மையையும் பிததிபலிக்கன்றன. சிற்றேரி ஆளுடைய நாயனார்...ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் அருள்பாலிக்கும் இத்திருக்கோயில் பத்தாம் நூற்றாண்டில் (கி.பி 954-971) சுந்தரசோழன் எனும் இரண்டாம் பராந்தக சோழன் மற்றும்சோழப்பேரரசைச் சார்ந்த அநிருத்த பிரம்மாதிராஜன் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் உலகுய்ய வந்த சோழன் முதலால் குரோத்துங்கன் காலத்தில் கற்றளழியாக மாற்றப்பட்டு இருக்கலாம். இத்காரணத்தொட்டு மாடம்பாக்கம் என்ற இந்த சிவஸ்தலத்திற்கு அநிருத்தமங்கலம், உலகுய்யவந்த சோழர் சதுர்வேதிமங்கலம் என்ற காரணப் பெயர்களும் உண்டு. தூங்கானை மாட (கஜபிரஷ்டம்) வழவில் அமைக்கப்பட்ட கர்ப்பக்கிரகம் இத்திருக்கோயிலின் சிறப்பம்சமாகும் மற்றும் அர்த்தமண்டம், முன் மண்டபம் உயரிய சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த தூண்கள் கொண்ட முக மண்டபமும் மேன்மை மிக்க கலை பண்பாட்டையும் தெய்வீகத் தன்மையையும் பிததிபலிக்கன்றன. சிற்றேரி ஆளுடைய நாயனார் நம்பிராட்டியார் என்று போற்றி வழிபடபட்ட இத்திருத்தலம் விஜயநகரப் பேரரசைச் சார்ந்த பௌராணிகர்கள் காலம் முதல், பதினான்காம் நூற்றாண்டு தொட்டு, மருவி தேனுபுரீஸ்வரர் தேனுகாம்பாள் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். கபில முனிவர், சிவபெருமானை இடதுகையால் ஆராதனை செய்தமைக்கா கபிலபசுவாக ( தேனுவாக) இத்தலத்தில் அவதரித்து பாபவிமோசனம் அடைந்ததாகவும், இதனை கனவில் கண்ணுற்ற சோழன் கட்டியதாகவும் ஒரு செவிவழி புராணம் வழக்கில் உள்ளது. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாத சுவாமிகள் திருப்புகழில் இத்திருத்தலம் பற்றி ( தோடுறுங் குழையாலே . என பாடியுள்ளார்.
பங்குனி உத்திரத் திருவிழா இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் திருக்கல்யாணம் தெப்போற்ச்சவம் என வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. தினமும் இரு கால பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூரில் புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டிய முதலாம் ராஜ ராஜ சோழனின் தந்தை இரண்டாம் பராந்தக சோழன் சோழ மன்னனின் ஆட்சியின் போது 956 மற்றும் 973 க்கு இடையில் இந்த கோயில் கட்டப்பட்டது. முக்கிய சரணாலயம் உறங்கும் யானையின் பின்புறம் போன்ற வடிவமாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.