பிரம்ம தேவனின் நிழலில் இருந்து உண்டானவர் கர்தம மஹரிஷி கர்தம மஹரிஷி தவம் இருந்த பலன் ஸ்ரீமஹா அவதரித்து கபிலர் என்னும் திருநாமத்துடன் வளர்ந்து வந்தார். கபிலர் தன் தாய் தேவஹீதிக்கு பக்தியோகம் (யோக தர்சனம், ஜீவன்களின் அவலநிலை, இறந்த பிறகு ஜீவன்கள் அடையும் நிலைகள்) ஸாங்க்ய யோகத்தையும் உபதேசம் செய்துவிட்டு வடகிழக்கு (கங்காஸாஹரம்) திசைக்கு சென்றுவிட்டார். பலகாலம் கழித்து, கபிலர் தன்பிறவியின் தொடர்பை நீக்கி, முக்தி நிலை பெறவேண்டி தவம் இருந்து சிவவழிபாடு செய்து வந்தார். அப்போது வழக்கத்திற்கு மாறாக ஒரு நாள் தன் இடது கரத்தில் சிவலிங்கத்தை வைத்துக் கொண்டு வலது கரத்தினால் சிவபூஜை செய்து இதனால் ஏற்பட்ட தோஷத்தினால் முக்திபேறு கிடைக்கவில்லை. மீண்டும் பூலோகத்தில்...