Screen Reader Access     A-AA+
அருள்மிகு இராமநாதீஸ்வரர் திருக்கோயில், போரூர், சென்னை - 600116, சென்னை .
Arulmigu Ramanadheeshwarar Temple, Porur, Chennai - 600116, Chennai District [TM000214]
×
Temple History

தல வரலாறு

சென்னை மாநகரத்தில் போரூர் எனும் பெயர் பெற்ற சேத்திரத்தில், இராமபிரான் ஒரு மண்டலம் தவம் இருந்து அருள்பெற்றதால் இங்கு உள்ள சிவ பெருமான் இராமநாதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இராமபிரான் ஒரு கணம் மஹாவிஷ்ணுவாக மாறி சிவனை கட்டித் தழுவியதால் அமிர்தலிங்கமாக மாறி காட்சி கொடுத்ததாகவும் இராமபிரான் போருக்கு சென்று சீதையை மீட்டு வர ஆசி வழங்கி அனுப்பியதாலும் இங்கு வீற்றிருக்கும் சிவபெருமான் (இராமபிரானுக்கு குரு) ஆதி இராமேஸ்வரர், உத்தர இராமேஸ்வரர் என சிறப்பு பெயர்கள் பெற்று தொண்டை மண்டலத்தில் அமைந்ததுள்ள நவக்கிரக ஸ்தலங்களில் குரு ஸ்தலமாக இருந்துவருகிறது. மேலும் இவ்வாலயத்தில் மஹா விஷ்ணுவின் பிரசாதமான தீர்த்தம், ஜடாரி சேவை வழங்கப்பட்டு வருகிறது.

தல பெருமை