அருள்மிகு இராமநாதீஸ்வரர் திருக்கோயில், 19, ஈஸ்வரன் கோயில் தெரு,போரூர், சென்னை -116 என்ற முகவரியில் அமைந்துள்ளது. அருள்மிகு இராமநாதீஸ்வரர் திருக்கோயில் நுழைவு வாயிலில் ஐந்து தளங்கள் கொண்ட திராவிட பாணியிலான இராஜகோபுரம் ஒன்பது கலசங்கள் கொண்டு கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மேலும் தூங்கானைமாடம் (கஜபிரஸ்தம்) அமைப்பில் அமைந்த விமானத்தில் இராமநாதீஸ்வரர், லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயில் அர்த்த மண்டபத்தின் நுழைவு வாயிலில் இரண்டு துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையின் மேலே மூன்று தளங்களுடன் வேசர சிகரம் கொண்ட விமானம் உள்ளது. அர்த்த மண்டபம் முன்பாக இருபது தூண்கள் கொண்ட மகா மண்டபம் உள்ளது மேலும் மகாமண்டபம் மற்றும் ராஜகோபுரம் இடையே கருவறைக்கு எதிரில் நந்தி, பலிபீடம் மற்றும் கொடி மரம்...