அருள்மிகு அங்காள பரமேஸ்வரி மற்றும் காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில், சூளை, சென்னை - 600112, சென்னை .
Arulmigu Angala Parameshwari And Kasi Viswanathar Temple, Choolai, Chennai - 600112, Chennai District [TM000217]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருத்தலமாகும்.
சூளை, அருள்மிகு அங்காளபரமேசுவரி திருக்கோயிலில் சிறிய சன்னதி கட்டி அங்காளபரமேசுவரி பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர். நாளடைவில் தற்பொழுதுள்ள நிலையை அடைந்துள்ளது.
அருள்மிகு அங்காளபரமேசுவரி பீடத்தில் இடது காலை மடித்தும், வலது காலை தொங்கவிட்ட நிலையிலும் எங்கும் இல்லாத சிறப்பாக இடது தொடையில் பாவாடைராயன் அமர்ந்துள்ள நிலையில் நான்கு கரங்களுடன் வலது கரத்தில்சூலமும், இடது கரத்தில் கபாலமும், அபய, வரத அஸ்தங்களுடன் அருள் பாலித்து வருகின்றாள்.
மூலவர் அங்காளபரமேசுவரி அம்பாளுடைய விக்கிரகம் நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் இடதுகால் மடித்து, வலதுகால் தொடங்கவிட்ட நிலையில், இடது கரங்களில் சூலமும், கபாலமும், வலது கரங்களில் உடுக்கையும், கத்தியும் கொண்டு காட்சியளிக்கிறாள். அம்மனுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட கவசமும், தனிக்கொடி மரமும் உள்ளது....இத்திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருத்தலமாகும்.
சூளை, அருள்மிகு அங்காளபரமேசுவரி திருக்கோயிலில் சிறிய சன்னதி கட்டி அங்காளபரமேசுவரி பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர். நாளடைவில் தற்பொழுதுள்ள நிலையை அடைந்துள்ளது.
அருள்மிகு அங்காளபரமேசுவரி பீடத்தில் இடது காலை மடித்தும், வலது காலை தொங்கவிட்ட நிலையிலும் எங்கும் இல்லாத சிறப்பாக இடது தொடையில் பாவாடைராயன் அமர்ந்துள்ள நிலையில் நான்கு கரங்களுடன் வலது கரத்தில்சூலமும், இடது கரத்தில் கபாலமும், அபய, வரத அஸ்தங்களுடன் அருள் பாலித்து வருகின்றாள்.
மூலவர் அங்காளபரமேசுவரி அம்பாளுடைய விக்கிரகம் நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் இடதுகால் மடித்து, வலதுகால் தொடங்கவிட்ட நிலையில், இடது கரங்களில் சூலமும், கபாலமும், வலது கரங்களில் உடுக்கையும், கத்தியும் கொண்டு காட்சியளிக்கிறாள். அம்மனுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட கவசமும், தனிக்கொடி மரமும் உள்ளது. கொடிமரத்திற்கு முன்னால் பலிபீடமும், சிம்மவாகனமும் உள்ளது. கொடி மரத்தின் இடது புறம் ஒரு சிறிய சன்னதியில் பாவாடைராயனுக்கு தனி சன்னதியும், சன்னதியின் முன் கோஷ்டத்தில் வலது பக்கம் விநாயகரும், இடது பக்கம் வீரபத்திரரும் அமையப்பெற்றுள்ளது. திருக்கோயிலின் முன்புறம் எந்த காலத்திலும் வற்றாத திருக்குளம் உள்ளது.
இத்திருக்கோயிலில் குடிக்கொண்டுள்ள அருள்மிகு அங்காளபரமேசுவரி குழந்தை உருவான பாவாடைராயனை மடியில் வைத்துள்ளதால், தாய் உள்ளத்தோடு குழந்தை பாக்கியம் உ வேண்டுவோருக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கப் பெறுவதுடன், திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறுவதுடன், தீய சக்திகளான பில்லி, சூனியத்திலிருந்து விலக்கி பக்தர்களை பாதுகாத்து வருகிறாள். அருள்மிகு அங்காளபரமேசுவரி அனைத்து சமூகத்தினருக்கும், பலதரப்பட்ட மக்களுக்கும் குல தெய்வமாக விளங்குவதால் தங்கள் குழந்தைகளுக்கு முடிகாணிக்கை செலுத்தி, காது குத்தி வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
குழந்தை பாக்கியம் வேண்டுவோர், பில்லி சூனிய தீய சக்திகளால் பாதிக்கப்பட்டோர் சக்தி தீர்த்தத்தில் நீராடி அங்காளம்மனை மூன்று வாரம் சுற்றிவந்தால் வேண்டிய வரம் கிடைக்கும்.
சகல அனுகூலங்களும் அனைவருக்கும் கிடைக்க இத்திருத்தலத்தில் நடைபெறும் மூன்று அமாவாசை இரவு பூஜையில் கலந்து கொண்டு சகல சௌபாக்கியங்களும் பெற்று வருகின்றனர்.