இத்திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருத்தலமாகும். சூளை, அருள்மிகு அங்காளபரமேசுவரி திருக்கோயிலில் சிறிய சன்னதி கட்டி அங்காளபரமேசுவரி பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர். நாளடைவில் தற்பொழுதுள்ள நிலையை அடைந்துள்ளது. அருள்மிகு அங்காளபரமேசுவரி பீடத்தில் இடது காலை மடித்தும், வலது காலை தொங்கவிட்ட நிலையிலும் எங்கும் இல்லாத சிறப்பாக இடது தொடையில் பாவாடைராயன் அமர்ந்துள்ள நிலையில் நான்கு கரங்களுடன் வலது கரத்தில்சூலமும், இடது கரத்தில் கபாலமும், அபய, வரத அஸ்தங்களுடன் அருள் பாலித்து வருகின்றாள். மூலவர் அங்காளபரமேசுவரி அம்பாளுடைய விக்கிரகம் நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் இடதுகால் மடித்து, வலதுகால் தொடங்கவிட்ட நிலையில், இடது கரங்களில் சூலமும், கபாலமும், வலது கரங்களில் உடுக்கையும், கத்தியும் கொண்டு காட்சியளிக்கிறாள். அம்மனுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட கவசமும், தனிக்கொடி மரமும் உள்ளது....