Screen Reader Access     A-AA+
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், Melakadambur - 608304, கடலூர் .
Arulmigu Amirthakadeswarar Temple, Melakadambur - 608304, Cuddalore District [TM021827]
×
Temple History

தல வரலாறு

ஸ்தல வரலாறு : முதலாம் குலோத்துங்கன் அவையில் ராஜகுருவாக கவுட (வங்காளம்) தேசத்திலிருந்து சிதம்பரம் நடராஜரை தரசிக்க வந்த ஸ்ரீகந்தசிவன் என்பவர் இருந்தார். இவர் தன்னுடன் ரிஷப தாண்டவமூர்த்தி மேல்நோக்கிய ரிஷபத்தின்மேல், வீசிய பத்து கரங்களில் கத்தி, சூலம், தீச்சட்டி, காபலம், பாம்பு, கேடயம், தண்டம், குத்தீட்டி ஏந்தி பிரளயகாலத்தில் சகல ஜீவன்களும் தன்அடி சேர்ந்திட காட்சியினை காட்டிடும் அற்புத கலை படைப்பு உடைய ஓர் அற்புதமான சிறிய செப்பு திருமேனியினை கொணர்ந்தார். பிரளயகாலத்தில் உலக ஜீவராசிகள் அனைத்தும் பரம்பொருளான சிவன் காலடியில் அடைக்கலமாகின்றன. ரிஷபத்தின் மேல் நின்று பிரளய தாண்டவமாடி அருள்பாலிக்கிறார். முதலாம் குலோத்துங்க சோழனின் வேண்டுகோளின்படி ராஜகுரு ஸ்ரீ கண்ட சிவம் கி.பி. 1110ல் கடம்பூரில் தங்கி திருக்கரக்கோயில் நிர்மான திருப்பணி...

தல பெருமை

ஸ்தல புராணம் : அசுரர்களும், தேவர்களும் திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்த கலசத்தினை பெற்ற பின், தேவர்கள் முழுமுதற்கடவுளான விநாயகரை வணங்காமல் அமுதுண்ண அமர்கிறார்கள். இவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணிய விநாயகர் அமிர்த கலசத்தினை பூலோகத்தில் மறைத்து வைக்கிறார். அவ்வாறு எடுத்து வந்து மறைத்து வைக்க முற்படுகையில் ஓர் துளி அமிர்தம் கடம்ப வனக்காட்டில் வீழ்ந்து சுயம்புலிங்க மூர்த்தியாகிறது. கடம்பவனக்காடு இந்நாளில் கடம்பூர் எனவும், தல மரம் கடம்ப மரமாகவும் ஆனது. இதனால் இத்தல இறைவன் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். இவர் சாந்த மூர்த்தியாகவும், காலசம்ஹார மூர்த்தியாகவும் அருள் பாளிக்கிறார். இக்கோயில் லிங்க மூர்த்தி சுயம்புலிங்க மூர்த்தியாக உருவானவர். எனவே, தொப்புள் ஸ்தானமாக கருதப்படும் கொடிமரம் இல்லை. மேலக்கடம்பூர் கோயில் கரக்கோயில் வகையினை...