தல பெருமை
இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட திருக்கோயிலாகும். பவானி அம்மனை மூலவராக கொண்டும் இத்திருக்கோயிலில் பராசக்தி விநாயகர், முருகர் மற்றும் ஐயப்பன் சன்னதிகளுடன் இத்திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயிலில் வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர சிறப்பு அபிஷேக வழிபாடுகளும், உற்சவ புறப்பாடு வழிபாடுகளும் மிகச்சிறப்புடன் நடைபெற்று வருவதால், இத்திருக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.