Screen Reader Access     A-AA+
அருள்மிகு கங்காதரேசுவரர் வகையறா திருக்கோயில், புரசைவாக்கம், சென்னை - 600084, சென்னை .
Arulmigu Gangadeeswarar Temple, Purasawalkam, Chennai - 600084, Chennai District [TM000232]
×
Temple History

தல பெருமை

அருள்மிகு கங்காதரேசுவரர் திருக்கோயில் ஸ்தல புராணம் புரசு வனம் பூத்துக் குலுங்கி எரியும் தழல் போன்று காட்சி தரும் புரசு மலர்களைக்காணும் போது இம்மரங்கள் எல்லாம் வேள்வி செய்வதாய் தோன்றியது. புரசு வனத்துப்பறவைகள் எழுப்பும் விதவிதமான கீச் கீச் ஒலிகள் வேதகானமாய் அந்தபிரதேசத்தைப் புனிதப்படுத்திக் கொண்டிருந்தன. பார்த்தவுடன் மனதில் பசுமையாய்ஒட்டிக்கொள்ளும் அழகு வனம்... இதில் வாசம் செய்ய யாருக்குத்தான் ஆசைஇருக்காது அப்படியொரு ஆசை அரசனுக்குள் எழுந்தது.சூரியகுலத்து வேந்தன் சகரன் அயோத்தியை தலைநகரமாக கொண்டு மிகஅற்புதமாக அரசாண்டு வந்தான். தனது நாடும் மக்களும் நலமுடன் வாழ அஸ்வமேதயாகம் தொடங்கினான். வேள்விக் குதிரையை ஒவ்வொரு தேசமாய அனுப்பிய போதுதனது பதவிக்கு இது ஆபத்தாக முடியுமோ என அஞ்சிய இந்திரன் வேள்விக்குதிரையை கவர்ந்து சென்று பாதாள...