தல பெருமை

கி.பி.15 ஆம் நுற்றாண்டினரான அருணகிரிநாதர் இந்த மலை மீதுள்ள இறைவனை தம் திருப்புகழில் பாடியிருப்பதால் அவர் காலத்திற்கு முன்பே கோயில் புகழ் பெற்றுச் சிறப்புடன் விளங்கியது. இம் மலையின் இயற்கையான குகை தளத்தில் சமண முனிவர்களுக்கான கற்படுக்கைகளும், பல தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் உள்ளன. இவையனைத்தும் கி.பி.1-2 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்தவை. இரு கல்வெட்டுகளில் சேரர் பரம்பரையின் மூன்று தலைமுறை மன்னர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுகின்றன. மேலும், சங்க காலப் பெயர்களான பிட்டன், கொற்றன், கீரன், ஓரி போன்ற பெயர்களும் பொன், துணி வணிகர்களின் பெயர்களும் இக்கல்வெட்டுகளில் குறிக்கப்படுகின்றன.