அருள்மிகு கச்சேரிபிள்ளையார் திருக்கோயில், Karur - 639001, கரூர் .
Arulmigu Katcheripilayar Temple, Karur - 639001, Karur District [TM025307]
×
Temple History
தல பெருமை
கொங்கு வள நன்னாட்டில் பாடல் பெற்ற சிவாலயங்களுள் முதன்மையானதும், காமதேனு , பிரம்மா, விபுண்டகன், எறிபந்ததநாயனார் ஆகியர் பூஜித்து நற்கதி பெற்ற ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வர சுவாமி எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஆனில் எனப்படும் கரூவூர் தலமாகும், இத்தகு சிறப்பு பெற்ற மாநகரின் கிழக்கு பகுதியில் நடுநாயகமாக மேற்கு திசை நோக்கி ஸ்ரீ விநாயகப் பெருமான் கம்பீரமாக ஸ்ரீ கச்சேரி பிள்ளையார் என்னும் பெயர் தாங்கி, தன்னை நாடிவருவபவருக்கு குறைகளையும், கஷ்டங்களையும் களைந்து, மேலும், நீண்டகாலமாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகள் இவரிடம் சென்று பிராத்தித்து வேண்டி சென்றால் அவைகளை முடித்து வைத்து நியாயமான வெற்றிகளை கொடுப்பதில் இவருக்கு நிகர் இவரேயாவர். பழங்காலத்தில் அரசாண்ட புகழ்ச்சோழர் என்னும் அரசர் இக்கோவிலின் அருகிலிருந்து...கொங்கு வள நன்னாட்டில் பாடல் பெற்ற சிவாலயங்களுள் முதன்மையானதும், காமதேனு , பிரம்மா, விபுண்டகன், எறிபந்ததநாயனார் ஆகியர் பூஜித்து நற்கதி பெற்ற ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வர சுவாமி எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஆனில் எனப்படும் கரூவூர் தலமாகும், இத்தகு சிறப்பு பெற்ற மாநகரின் கிழக்கு பகுதியில் நடுநாயகமாக மேற்கு திசை நோக்கி ஸ்ரீ விநாயகப் பெருமான் கம்பீரமாக ஸ்ரீ கச்சேரி பிள்ளையார் என்னும் பெயர் தாங்கி, தன்னை நாடிவருவபவருக்கு குறைகளையும், கஷ்டங்களையும் களைந்து, மேலும், நீண்டகாலமாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகள் இவரிடம் சென்று பிராத்தித்து வேண்டி சென்றால் அவைகளை முடித்து வைத்து நியாயமான வெற்றிகளை கொடுப்பதில் இவருக்கு நிகர் இவரேயாவர். பழங்காலத்தில் அரசாண்ட புகழ்ச்சோழர் என்னும் அரசர் இக்கோவிலின் அருகிலிருந்து நீதி வாங்கியதாக முன்னோர்கள் வாக்கு. பிற்காலத்தில் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் இவரை பிரார்த்தித்து நீதிவழங்கி வந்ததாக அறியப்படுவதால் இவ்விநாயகர் கச்சோரிப்பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். இவ்வாலயம் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயிலில் நீண்ட காலமாக குடமுழுக்கு நடைபெறாதிருந்து பொதுமக்களின் பெருமுயற்சியால் 2000 ஆம் திருப்பணி துவங்கி ராஜகோபுரத்தடன் கூடிய புதிய ஆலயம் செப்பனிடப்பட்டு 2001 ஆண்டு மற்றும் 2016 ஆண்டு என இரண்டு குடமுழுக்கு எனும் பெருஞ்சாநிதி பெருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.