Screen Reader Access     A-AA+
அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், அய்யர்மலை - 639120, கரூர் .
Arulmigu Raththinakreeshwarar Temple, Ayyarmalai - 639120, Karur District [TM025325]
×
Temple History

தல வரலாறு

காவேரி தென்கரையில் பாடல் பெற்ற ஸ்தலத்தில் முதலாவதாக அமைந்துள்ள திருக்கோயிலாகும். ஐயர்மலையில் இரத்தினகிரீஸ்வரர் எட்டு பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சிவபெருமான் சுயம்பு லிங்கமூர்த்தியாக எழுந்தருளியிருக்கின்றார். யாவருக்கும் மேலாகிய தலைவர் (ஐயர்) இங்கு கோயில் கொண்டிருப்பதால் ஐயர்மலை என்ற பெயர் எழுந்தது. பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின்போது இங்கு தங்கி இருந்தனர் என்றும் அதனால் இம்மலைக்கு ஐவர்மலை என்ற பெயர் உண்டாயிற்று. நாளடைவில் திரிந்து ஐயர்மலை என்றாயிற்று. இம்மலைப்பாறையிலும் அக்காலத்து பன்னத்துறைவேசன் என்னும் சமன முனிவர் வாழ்ந்து வந்ததாக கல்வெட்டு வரலாறு குகையில் உள்ளதாக தெரியவருகிறது. தொன்றுதொட்டு இன்றும் குளித்தலை காவேரி...