அய்யர்மலை அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலானது கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், சிவாயம், அய்யர்மலையில் அமைந்துள்ளது. 1017படிகள் கொண்டது இம்மலைக்கோயில். சுவாமி சுயம்பாகத் தோன்றியவர். சுவாமியின் பெயர் இரத்தினகிரீஸ்வரர், அம்பாள் பெயர் சுரும்பார்குழலி. இங்கு வைரப்பெருமாள், கருப்பண்ணசுவாமி சன்னதிகள் உள்ளன. தற்போது ரோப்கார் திருப்பணி வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.