தல வரலாறு
இத்திருக்கோவில் காவிரின் தென்பால் திருச்சி - கரூர் நெடுஞ்சாலையின் தென்புறம் பாயும் தென்கரை கால்வாயின் தென்புறம் அமைந்திருக்கும் பழம் பதி இதன் நான்கு புறங்களிலும், நடுவிலும் திருவீதிகள் உள்ளன. திருச்சுற்று மதில்களுக்குள் நடுநாயகமாக இறைவனின் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஆகியவை உள்ளன. இத்திருக்கோயிலானது காவிரி தென்கரையில் திருக்கடம்பந்துறைக்குக் கிழக்கேயும், பெட்டவாய்தலைக்கு மேற்கேயும் மருதூரைச் சேர்ந்தும் அமைந்துள்ளது. இதுவே இத்திருக்கோவிலின் புவியியல் இடவமைவு சிறப்பு ஆகும்.