அருள்மிகு பாம்பாளம்மன் திருக்கோயில், Lakshmanapatti, Mahathanapuram South - 639128, கரூர் .
Arulmigu Pampalamman Temple, Lakshmanapatti, Mahathanapuram South - 639128, Karur District [TM025363]
×
Temple History
தல வரலாறு
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், லட்சுமணம்பட்டி, அருள்மிகு பாம்பாலம்மன் திருக்கோயில் சுமார் 100 ஆண்டுக்கு மேற்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அம்மன் பாம்புற்று வடிவமாக சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். இந்த பாம்புபுற்று திருக்கோயிலானது கிழக்கு நோக்கி அருள்பாளிக்கிறாள்.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், லட்சுமணம்பட்டி, அருள்மிகு பாம்பாலம்மன் திருக்கோயில் சுமார் 100 ஆண்டுக்கு மேற்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அம்மன் பாம்புற்று வடிவமாக சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். இந்த பாம்புபுற்று திருக்கோயிலானது கிழக்கு நோக்கி அருள்பாளிக்கிறாள்.
தல பெருமை
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், லட்சுமணம்பட்டி, அருள்மிகு பாம்பாலம்மன் திருக்கோயில் பாம்புற்று வடிவமாக சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.
விஷக்கடி நீங்குவதாக ஐதீகம்
பாம்பு கடித்துவிட்டால் இங்குள்ள பாம்பாலம்மனை வேண்டி இத்திருக்கோயிலில் 3 நாட்கள் தங்கியிருந்து திருக்கோயிலில் தரும் பிரசாதம் சாப்பிட்டு திருக்கோயிலிலேயே மூன்று நாட்கள் தங்கியிருந்து வழிபட விஷக்கடி நீங்குவதாக ஐதீகம்.
இத்திருக்கோயிலிலுள்ள பாம்பாலம்மனை வழிபட பில்லி சூன்யம் நீங்குவதாகவும் ஐதீகம்.
குழந்தை வரம் நல்கும் தலம்
பாம்பாலம்மனை வழிபட்டு ஏழு வாரங்கள் தொடர்ச்சியாக வாரத்தில் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் தொடர்ந்து ஏழு...கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், லட்சுமணம்பட்டி, அருள்மிகு பாம்பாலம்மன் திருக்கோயில் பாம்புற்று வடிவமாக சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.
விஷக்கடி நீங்குவதாக ஐதீகம்
பாம்பு கடித்துவிட்டால் இங்குள்ள பாம்பாலம்மனை வேண்டி இத்திருக்கோயிலில் 3 நாட்கள் தங்கியிருந்து திருக்கோயிலில் தரும் பிரசாதம் சாப்பிட்டு திருக்கோயிலிலேயே மூன்று நாட்கள் தங்கியிருந்து வழிபட விஷக்கடி நீங்குவதாக ஐதீகம்.
இத்திருக்கோயிலிலுள்ள பாம்பாலம்மனை வழிபட பில்லி சூன்யம் நீங்குவதாகவும் ஐதீகம்.
குழந்தை வரம் நல்கும் தலம்
பாம்பாலம்மனை வழிபட்டு ஏழு வாரங்கள் தொடர்ச்சியாக வாரத்தில் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் தொடர்ந்து ஏழு வாரங்கள் விரதமிருந்து பாம்பாலம்மனை வழிபட்டு திருக்கோயிலில் தரும் பிரசாதத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்து, ஏழாவது வாரம் மண்சோறு சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பிரார்த்தனை ஸ்தலம்
மேலும் ஏதாவது ஒரு வேண்டுதலை வைத்து பாம்பாலம்மனை வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் நிறைவேறுவதாக நம்பப்படுகிறது.
நேர்த்திக்கடன்
பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் நாடகம் வைப்பதாக வேண்டிக்கொள்கிறார்கள். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் வைக்கும் நாடகத்தில் பாம்பாலம்மன் பக்தர்களுடன் பக்தராக வந்து நாடகத்தை பார்ப்பதாக ஐதீகம். மேலும் இத்திருக்கோயில் வளாகத்தில் பாம்பாலம்மன் பாம்பு வடிவிலும் வந்து நாடகத்தை பார்ப்பதாக ஐதீகம்.