கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், லட்சுமணம்பட்டி, அருள்மிகு பாம்பாலம்மன் திருக்கோயில் பாம்புற்று வடிவமாக சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். விஷக்கடி நீங்குவதாக ஐதீகம் பாம்பு கடித்துவிட்டால் இங்குள்ள பாம்பாலம்மனை வேண்டி இத்திருக்கோயிலில் 3 நாட்கள் தங்கியிருந்து திருக்கோயிலில் தரும் பிரசாதம் சாப்பிட்டு திருக்கோயிலிலேயே மூன்று நாட்கள் தங்கியிருந்து வழிபட விஷக்கடி நீங்குவதாக ஐதீகம். இத்திருக்கோயிலிலுள்ள பாம்பாலம்மனை வழிபட பில்லி சூன்யம் நீங்குவதாகவும் ஐதீகம். குழந்தை வரம் நல்கும் தலம் பாம்பாலம்மனை வழிபட்டு ஏழு வாரங்கள் தொடர்ச்சியாக வாரத்தில் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் தொடர்ந்து ஏழு...