புதுக்கோடையிலிருந்து பொன்னமராவதி செல்லும் நெடுஞ்சாலையில் கொன்னையூர் அமைந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து கொன்னையூர் 35 கி.மீ தொலைவில் உள்ளது. முன்னோரு காலத்தில் வியாபார காரியங்களுக்காகவும் பால் எடுத்துச் செல்லும் போது தற்போது அம்பாள் வீற்றிருக்கும் இடத்தில் இருந்த ஒரு கொன்னைமரத்து வேர் தடுக்கி பால் கொட்டி விடுவது தொடர்ந்து நடந்துள்ளது. இதை கண்ணுற்ற மேற்படி கிராமவாசிகள் அந்த இடத்தில் அம்பாள் எழுந்தருளியிருப்பதாகவும் அதை வழிபட்டு வரும்படியும் அசரீரி வாக்கும் எழுந்துள்ளது. அதன் பின்பு கொன்னைமரத்தடியில் அம்மனை பிரிதிஷ்டை செய்து அம்பாளை வழிபட்டு வந்தார்கள். இதனாலே இவ்வூருக்கு கொன்னையூர் என பெயர் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இது ஒரு பிராத்தனை ஸ்தலமாகும். பிரிதி ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில்...புதுக்கோடையிலிருந்து பொன்னமராவதி செல்லும் நெடுஞ்சாலையில் கொன்னையூர் அமைந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து கொன்னையூர் 35 கி.மீ தொலைவில் உள்ளது. முன்னோரு காலத்தில் வியாபார காரியங்களுக்காகவும் பால் எடுத்துச் செல்லும் போது தற்போது அம்பாள் வீற்றிருக்கும் இடத்தில் இருந்த ஒரு கொன்னைமரத்து வேர் தடுக்கி பால் கொட்டி விடுவது தொடர்ந்து நடந்துள்ளது. இதை கண்ணுற்ற மேற்படி கிராமவாசிகள் அந்த இடத்தில் அம்பாள் எழுந்தருளியிருப்பதாகவும் அதை வழிபட்டு வரும்படியும் அசரீரி வாக்கும் எழுந்துள்ளது. அதன் பின்பு கொன்னைமரத்தடியில் அம்மனை பிரிதிஷ்டை செய்து அம்பாளை வழிபட்டு வந்தார்கள். இதனாலே இவ்வூருக்கு கொன்னையூர் என பெயர் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இது ஒரு பிராத்தனை ஸ்தலமாகும். பிரிதி ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் ஆயிரகணக்கான பக்தர்கள் அம்மனை வணங்கி அருள்பெற்றுச் செல்கிறார்கள்.