அமைவிடம் - இக்கோயில் புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது.1 கொன்றை மரங்கள் அடர்ந்த இடமாக இருந்ததால் கொன்றையூர் என்றாகி தற்போது கொன்னையூர் என்று அழைக்கப்படுகிறது மூலவர் இக்கோயிலின் மூலவர் முத்துமாரியம்மன் ஆவார். கோயிலின் தல மரம் நெல்லி மரம் ஆகும். விழாக்கள் ஆடி அமாவாசை, தமிழ் வருடப்பிறப்பு, பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கும் பங்குனி திருவிழா, பூச்சொரிதல் திருவிழா ஆகியவை இங்கு நடைபெறுகின்ற விழாக்களாகும். காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை என்ற வகையில் மூன்று கால பூசைகள் இங்கு நடத்தப்பெறுகின்றன. சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் வழிபடுகின்ற முக்கியக் கோயிலாக இது கருதப்படுகிறது. பங்குனித் திருவிழாவின் ஒரு பகுதியாக இங்கு நடைபெறுகின்ற நாடு செலுத்துதல் விழா சிறப்பானதாகும். அவ்விழாவின்போது அருகிலுள்ள அருகிலுள்ள நான்கு நாடுகளின்...