Screen Reader Access     A-AA+
அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில், அறந்தாங்கி நகர் மற்றும் வட்டம் - 614616, புதுக்கோட்டை .
Arulmigu Veeramakaliamman Temple, Aranthangi - 614616, Pudukkottai District [TM025414]
×
Temple History

இலக்கிய பின்புலம்

தல வரலாறு இத்திருக்கோயிலுக்கு எனத் தல வரலாறு புத்தகம் ஏதுமில்லை. மேற்படி திருக்கோயில் அமைந்துள்ள ஊரின் மூத்தவர்கள், பெரியவர்கள், அர்ச்சகர்கள் ஆகியோரின் செவி வழி செய்தியின்படி இத்திருக்கோயில் கிராம தேவதையாகவும், காவல் தெய்வமாகவும் இருந்து வருகிறது. மேலும் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக இருந்து வருகிறது. அம்பாளுக்கு எலுமிச்சையில் விளக்கு போடுவது, பிள்ளை தத்துகொடுத்தல், திருமண தடை நீக்குதல் ஆகியவற்றிக்கு உகந்த ஸ்தலமாக இருந்து வருகிறது. அம்பாள் வடக்கு பார்த்து காளியாக இருப்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும். மேலும் அம்பாள் 8-கைகளுடன் அசுரனைக் காலில் மிதித்து அம்பாள் பெரிய அளவில் மூலஸ்தானத்தில் அமைந்துள்ளாள். இத்திருக்கோயிலில் ஆடிமாதம் முழுவதும் திருவிழா, 6-ம் திருவிழாவில் பால்குடம், 2 நாட்கள் தேரோட்டம், ...