Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குமாரவயலூர், குமாரவயலூர் - 620102, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Subramaniya Swamy Temple, Kumaravayalur, Kumaravayalur - 620102, Thiruchirappalli District [TM025709]
×
Temple History

தல வரலாறு

தலவரலாறு இத்திருக்கோயில் உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோழ மன்னர்களால் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின்னர் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் இத்திருக்கோயிலின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார். சோழமன்னர்கள் இப்பகுதிக்கு வந்து வேட்டையாடும்போது தாகம் எடுக்க மூன்று கிளைகளாக அமைந்து வளர்ந்திருந்த ஒரு கரும்பினை ஒடித்து தாகம் தீர்க்க எண்ணி ஒடித்த போது கரும்பிலிருந்து உதிரம் கசிய அவ்விடத்தை தோண்டியபோது கரும்பு வளர்ந்த அடிப்பகுதியில் சிவலிங்கம் தென்பட்ட, உடன் மன்னர் இத்திருக்கோயிலினை அமைத்து சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டு வந்தார். இத்தலத்தின் ஆதிநாதர் சன்னதி கர்ப்பகிரக சுவரில் 20 கல்வெட்டுக்கள் உள்ளன. இத்திருக்கோயிலின் தல விருட்சம் வன்னிமரம் ஆகும். முருகன் தன் வேலினால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் என்ற பெயருடன் திருக்குளம் ஒன்று கோயிலின் முகப்பில் தென்கிழக்கு மூலையில்...

தல பெருமை

இத்தலம் நான்குபுறமும் பசுமை நிறைந்த வயல் வெளிகளால் சூழப்பட்டுள்ளது. இத்தலத்தின் முன்பு சக்தி தீர்த்தம் எனப்பெயர் பெற்ற திருக்குளம் ஒன்று அமைந்துள்ளது. அருணகிரிநாதரை வயலூருக்கு வாவென அழைத்து திருப்புகழ் பாட அடி எடுத்துக்கொடுத்த திருத்தலம் ஆகும். முருகன் இத்தலத்தில் தன் தாய் தந்தையர் ஆகிய ஆதிநாதர், ஆதிநாயகியை முன்னதாக வணங்கிய பின்னர் தான் தன் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இத்தலத்தில் அமைந்துள்ள நவக்கிரக சன்னதியில் ஸ்ரீ சூரியன். தனது தேவியர் சாயாதேவி மற்றும் உஷாதேவியுடன் மேற்கு நோக்கியும் ஏனைய எட்டு கிரகங்களும் சூரியனை நடுநிலையாக நோக்கியும் உள்ளன. தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்திப் பெற்றதும் நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் வேண்டி பூசைகள் செய்வது சிறப்பானதாகும். நீண்டகாலம் நடைபெறாமல் தடையாக இருந்த திருமணதோஷம் அகன்று திருமணம் நடைபெற...