இத்திருக்கோயில் உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோழ மன்னர்களால் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின்னர் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் இத்திருக்கோயிலின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார். சோழமன்னர்கள் இப்பகுதிக்கு வந்து வேட்டையாடும்போது தாகம் எடுக்க மூன்று கிளைகளாக அமைந்து வளர்ந்திருந்த ஒரு கரும்பினை ஒடித்து தாகம் தீர்க்க எண்ணி ஒடித்த போது கரும்பிலிருந்து உதிரம் கசிய அவ்விடத்தை தோண்டியபோது கரும்பு வளர்ந்த அடிப்பகுதியில் சிவலிங்கம் தென்பட்ட, உடன் மன்னர் இத்திருக்கோயிலினை அமைத்து சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டு வந்தார். இத்தலத்தின் ஆதிநாதர் சன்னதி கர்ப்பகிரக சுவரில் 20 கல்வெட்டுக்கள் உள்ளன. இத்திருக்கோயிலின் தல விருட்சம் வன்னிமரம் ஆகும். முருகன் தன் வேலினால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் என்ற பெயருடன் திருக்குளம் ஒன்று கோயிலின் முகப்பில் தென்கிழக்கு மூலையில்...
06:00 AM IST - 01:00 PM IST | |
03:30 PM IST - 09:00 PM IST | |
09:00 PM IST - 09:00 PM IST | |
நடை திறந்திருக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மதியம் 3.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை விழாக்காலங்களில் அதிகாலை 4.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும். |