Screen Reader Access     A-AA+
அருள்மிகு வேதநாராயணப்பெருமாள் திருக்கோயில், திருநாராயணபுரம், திருநாராயணபுரம் - 621203, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Vedhanarayanaperumal Temple, Thirunarayanapuram, Thirunarayanapuram - 621203, Thiruchirappalli District [TM025711]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு வேதநாயகித் தாயார் உடனுறை அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயிலாகிய இத்திருத்தலத்தில், நான்கு வேதங்களையும் தலையணைகளாகக்கொண்டு ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட திருக்கோலத்தில் அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் அருள்பாலிக்கிறார். திருவடிகள் பக்கத்தில் பக்த பிரகலாதன் அமர்ந்த நிலையில் உள்ளார். இத்திருத்தலத்தில் ஸ்ரீமன் நாராயணன் பிரம்மாவிற்கு நான்கு வேதங்களை உபதேசித்ததால் இத்திருத்தலம் கல்விக்கு சிறப்பு பெற்று விளங்குகிறது. மாணவர்கள் மற்றும் வேலைக்கு முயற்சி செய்பவர்கள் தங்களது புத்தகத்தை கொண்டுவந்து பெருமாள் பாதத்தில் வைத்து வழிபடுகிறன்றனர். இத்தலத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தில் கல்வி ஹோமம் நடைபெற்று வருகிறது. இத்திருத்தலம் பிள்ளைதிருநறையூர் அரையருக்கும் அவர் குடும்பத்துக்கும் மோட்சம் அருளப்பட்ட தலமாகும். இத்திருக்கோயில் ஆதிரங்கம் எனவும், வேதபுரி...