Screen Reader Access     A-AA+
அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில், Lalgudi - 621601, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Saptharisheeswarar Temple, Lalgudi - 621601, Thiruchirappalli District [TM025718]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் திருநாவுக்கரச நாயனாரின் பண்டெழுவர் தவத்துறை என்ற திருவாக்கின் மூலம் இத்தலம் 7-ம் நூற்றாண்டு முதலே நிலைத்திருந்நதை அறியமுடிகிறது. இக்கோயில் உள்ள சோழர் காலக் கல்வேட்டுகளில் மிகப் பழமையானது முதலாம் ஆதித்தரின் கல்வெட்டாகும், இவரின் ஆட்சிக்காலம் 9-ம் நூற்றாண்டின் கடைப்பகுதியாகும். இவரின் ஆட்சிக்காலத்தில் தான் கோயில் செங்கல் தளியாக இருந்து கற்றளியாக மாற்றம் அடைந்தது, திருநாவுக்கரசரின் திருவாக்காலும், பொ.கா 9-19 ஆம் நூற்றாண்டு வரை கல்வெட்டின் அடிப்படையில் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையை சார்ந்தது.

தல பெருமை

ஒரு காலத்தில் தாரகன் என்னும் அசுரனைக் கொண்டு தேவர்களைக் காக்க வேண்டி சிவபெருமான் திருவருளால் முருகக் கடவுள் அவதாரஞ்செய்து குழந்தையாகத் தோன்றினார். ரிஷி பத்திகளில் அருந்ததி குழந்தைக்குப் பால் கொடுக்க மறுக்கவே கார்த்திகை பெண்கள் அறுவரும் குழந்தைக்குப் பால் கொடுத்தனர். இச்செய்தியை கேட்டு ஏழு முனிவர்களும் தங்கள் மனைவியாரைச் கபித்தனர். இது காரணமாக முருகனும் முனிவர்களைச் சபிக்க அவர்கள் சாபம் நீங்கும் பொருட்டுத் திருவையாற்றுக்குச் சென்று தங்கி அங்கிருந்து இத்தலத்துக்கு வந்து தவம் செய்து தங்கள் சாபம் நீங்கப் பெற்று பெருமான் திருவருளைப் பெற்றனர். அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கௌதமர், ஆங்கீரசர், மரிசி ஆகியோர் அந்த ஏழு முனிவருக்கும் அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும், இத்தலத்திறகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் என்றும்...

இலக்கிய பின்புலம்

தல வரலாறு : இத்திருக்கோயில் திருநாவுக்கரச நாயனாரின் பண்டெழுவர் தவத்துறை என்ற திருவாக்கின் மூலம் இத்தலம் 7-ம் நூற்றாண்டு முதலே நிலைத்திருந்நதை அறியமுடிகிறது. இக்கோயில் உள்ள சோழர் காலக் கல்வேட்டுகளில் மிகப் பழமையானது முதலாம் ஆதித்தரின் கல்வெட்டாகும், இவரின் ஆட்சிக்காலம் 9-ம் நூற்றாண்டின் கடைப்பகுதியாகும். இவரின் ஆட்சிக்காலத்தில் தான் கோயில் செங்கல் தளியாக இருந்து கற்றளியாக மாற்றம் அடைந்தது, திருநாவுக்கரசரின் திருவாக்காலும், பொ.கா 9-19 ஆம் நூற்றாண்டு வரை கல்வெட்டின் அடிப்படையில் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையை சார்ந்தது. தல புராணம் : ஒரு காலத்தில் தாரகன் என்னும் அசுரனைக் கொண்டு தேவர்களைக் காக்க வேண்டி...