ஒரு காலத்தில் தாரகன் என்னும் அசுரனைக் கொண்டு தேவர்களைக் காக்க வேண்டி சிவபெருமான் திருவருளால் முருகக் கடவுள் அவதாரஞ்செய்து குழந்தையாகத் தோன்றினார். ரிஷி பத்திகளில் அருந்ததி குழந்தைக்குப் பால் கொடுக்க மறுக்கவே கார்த்திகை பெண்கள் அறுவரும் குழந்தைக்குப் பால் கொடுத்தனர். இச்செய்தியை கேட்டு ஏழு முனிவர்களும் தங்கள் மனைவியாரைச் சபித்தனர். இது காரணமாக முருகனும் முனிவர்களைச் சபிக்க அவர்கள் சாபம் நீங்கும் பொருட்டுத் திருவையாற்றுக்குச் சென்று தங்கி அங்கிருந்து இத்தலத்துக்கு வந்து தவம் செய்து தங்கள் சாபம் நீங்கப் பெற்று பெருமான் திருவருளைப் பெற்றனர். அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கௌதமர், ஆங்கீரசர், மரிசி ஆகியோர் அந்த ஏழு முனிவருக்கும் அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும், இத்தலத்திறகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் என்றும்...