Screen Reader Access     A-AA+
அருள்மிகு உத்தமர் திருக்கோயில், No1. Tolgate, Mannachanallur - 621216, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Uthamar Temple,, No1. Tolgate, Mannachanallur - 621216, Thiruchirappalli District [TM025726]
×
Temple History

தல வரலாறு

கட்டுமான அமைப்புகள் கல்வெட்டின்படி இத்திருக்கோயில் முற்கால சோழர் காலத்தை சேர்ந்தது எனவும் , பாண்டியர்கள் விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், தஞ்சை மராட்டிய மன்னர்கள் ஆகியோர்களால் விரிவுபடுத்தப்பட்டு வரப்பட்டுள்ளது எனவும், அறியப்பட்டுள்ளது. கல்வெட்டின்படி இப்பகுதி திருக்கரம்பனூர் என அழைக்கப்படுகிறது.

தல பெருமை

மும்மூர்த்திகளாம அருள்மிகு பிரம்மா , அருள்மிகு விஷ்ணு , அருள்மிகு சிவபெருமாள் ஆகியோர் அவரவரின் தேவிகளாகிய அருள்மிகு சரஸ்வதி அருள்மிகு மகாலட்சுமி , அருள்மிகு பர்ர்வதி ஆகியோருடன் குடி கொண்டு அருளும் இந்தியாவின் ஒரே திருக்கோயில் அருள்மிகு உத்தமர் திருக்கோயிலாகும் பிக்ஷண்டார் கோயில் என்று அழைக்கப்படும் இவ்வூரும் அருள்மிகு உத்தமர்க்கோயிலும் சைவ வைணவ் ஒருமைப்பாட்டுக்கு சான்றாக விளங்குகின்றன

இலக்கிய பின்புலம்

பிரம்மாவிற்கு கதம்ப மர உருவில் காட்சி அளித்ததால் இத்தலம் கதம்பனூர் என்றும் கரம்பனூர் என்றும் அழைக்கப்படுகிறது. திருமங்கையாழ்வார் கரம்பனூர் உத்தமன் என்று மங்களாசாசனம் செய்துள்ளார். அதன் காரணமாகவே இத்திருக்கோயில் உத்தமர் திருக்கோயில் என அழைக்கப்படுகிறது. சிலமாதவம் செய்துந் என பிள்ளைப்பெருமாள் ஐயங்காராலலும் பாடப்பெற்றுள்ளது. பேரானைக் குறுங்குடியெம் பெருமானைத் திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூ ருத்தமனை முத்திலங்கு காரார் திண்கடலேழு மலையேழிவ்வுலகேழுன்டும ஆராதென்றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே ...