திருச்சி மாநகரிலிருந்து 5 கி.மீ தொலைவில் பிச்சாண்டார் கோயில் என்னும் அழகிய சிற்றூரில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அருள்மிகு உத்தமர் திருக்கோயில் அமைந்துள்ளது. கதம்பவனம் கரம்பனூர் ஆதிமாபுரம் பிரம்மபுரி தீபஷேத்திரம் நீபவனம் திருக்கரம்பந்துறை ஆகிய பண்டைய பெயர்களுடன் தற்போது பிச்சாண்டார் கோயில் என்றழைக்கப்படும் இவ்வூரும் அருள்மிகு உத்தமர் கோவிலும் சைவ வைணவ ஒருமைப்பாட்டுக்கு சான்றாக விளக்குகின்றன. புராணவரலாறுகளின் அடிப்படையில் வைணவ புராணத்தின்படி பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த சிவபெருமான் ...